உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணம், அதிகார பலத்துக்கு கிடைத்த வெற்றி: வாசன்

பணம், அதிகார பலத்துக்கு கிடைத்த வெற்றி: வாசன்

கோவை:தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் கூறியதாவது:பொருளாதார வளர்ச்சியையும், நாட்டின் பாதுகாப்பையும் செய்யும் நல்ல அரசாக செயல்படுகிறது மத்திய அரசு. ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு, இந்தியாவில் பல்வேறு துறைகளில் சரியாக வழி நடத்தக்கூடிய திறமையானவர்களை தான், பிரதமர் தேர்வு செய்துள்ளார்.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போட்டி குறித்து, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் தீர்மானிப்பர். பண பலம், ஆள் பலம், அதிகார பலத்திற்கு கிடைத்த வெற்றி தான் தி.மு.க., வெற்றி.நீட் தேர்வை பொறுத்தவரையில், தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய, நடுத்தர மாணவர்கள் சில ஆண்டுகளாக, வெளி மாநில மாணவர்களுக்கு சவால் விடும் வகையில், செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கல்வியையும் அரசியலாக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை