உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கட்சி கொடி இன்று அறிமுகம்

விஜய் கட்சி கொடி இன்று அறிமுகம்

சென்னை:தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில், இன்று ( ஆக.,22) அறிமுகம் செய்கிறார்.தமிழக வெற்றி கழகம் கட்சியை துவக்கியுள்ள விஜய், 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளார். அதற்கு முன், கட்சியின் பெயர் மற்றும் கொடியை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை துவங்கி உள்ளார்.கடந்த 19ம் தேதி பவுர்ணமி நாளில், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், மஞ்சள் நிறத்துடன் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கொடியை அதற்கான கம்பத்தில் விஜய் ஏற்றினார். இன்று பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

விஜய் அறிக்கை:

சரித்திரத்தின் புதிய திசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால், அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்து கொடுத்திருக்கும் நாள் தான் இன்று. தமிழகத்தின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் நம் வீரக்கொடியை, வெற்றிக்கொடியை, இன்று தலைமை நிலைய செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கட்சி கொடிப் பாடலை வெளியிட்டு, கட்சி கொடியை ஏற்றி வைக்கிறோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை