உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விக்கிரவாண்டி இடை தேர்தல் : கனியாமூர் பள்ளி மாணவி தாயார் போட்டி

விக்கிரவாண்டி இடை தேர்தல் : கனியாமூர் பள்ளி மாணவி தாயார் போட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பலியான கனியாமூர் பள்ளி மாணவியின் தாயார் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.விக்கிரவாண்டி தொகுதியில் திமுக எம்.எல்.,ஏ.,மரணம் அடைந்ததை அடுத்து அங்கு இடை தேர்தல்அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி வரும் ஜூலை மாதம் 10 ம் தேதி இடை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 14ம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வந்த நிலையில் இன்று (21.06.2024) நிறைவு பெற்றது. இடை தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா தேசிய ஜனநாயக கூட்டணியின் பாமக சார்பில் சி. அன்புமணி, மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா ஆகியோர் நேரடியாக மோதுகின்றனர். இத் தேர்தலில் அதிமுக மற்றும் அக்கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. இதனால் தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. தற்போது வரையில் 64 பேர் வேட்புமனுவைதாக்கல் செய்துள்ளனர். இதனிடையே கடந்த 2022-ல்கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் பலியான மாணவியின் தாயாரான செல்வி தனது கணவர் ராமலிங்கத்துடன் வந்து தேர்தல் அதிகாரி சந்திரசேகரிடம் வேட்பு மனுவை அளித்தார். தொடர்ந்து அவர் கூறுகையில் தனது குழந்தைக்கு ஏற்பட்ட நிலைமை மற்ற குழந்தைகளுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காக தான் தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ranga Ramanathan
ஜூன் 22, 2024 05:51

வாபஸ் வாங்க போட்டி போட்டு பணம் கொடுப்பார்களே.


கோவிந்தராஜ் கிணத்துக்கடவு
ஜூன் 22, 2024 05:48

ஏதாவது ஆதாயம் தேடும் முயற்ச்சி


மேலும் செய்திகள்







புதிய வீடியோ