உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளருக்கு விருப்ப ஓய்வு

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளருக்கு விருப்ப ஓய்வு

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்டம் உள்ளது. இங்கு மாஞ்சோலை, ஊத்து உள்ளிட்ட பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன; ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர்.'பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனம், 99 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்து இதை நடத்தி வந்தது. குத்தகை காலம் 2028ல் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்பாகவே, மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான ஓய்வு திட்டங்களை நிறுவனம் அறிவித்துள்ளது.இதன்படி, தொழிலாளர்களுக்கு விருப்ப பணி ஓய்வு திட்டம் வி.ஆர்.எஸ்., மூலம் வெளியேற விருப்பமுள்ளவர்கள், வரும் ஜுன் 14க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு விடுத்துள்ளது. விருப்ப ஓய்வு திட்டத்தில் உள்ள பணப் பலன்கள் குறித்தும் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை