உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மகளிர் கட்டடக்கலை வல்லுனருக்கு வேட் ஆசியா அமைப்பு விருது

மகளிர் கட்டடக்கலை வல்லுனருக்கு வேட் ஆசியா அமைப்பு விருது

சென்னை : மகளிர் கட்டடக்கலை மற்றும் பொறியியல் வல்லுனர்களுக்கான, 'வேட் ஆசியா' அமைப்பு சார்பில், 2024ம் ஆண்டுக்கான இளம் கட்டடக் கலை வல்லுனர் விருது, கர்நாடக மாநிலம், பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும், 'சம்வத் டிசைன் ஸ்டூடியோ' நிறுவனர் ஆர்.ராமலட்சுமிக்கு வழங்கப்பட்டுள்ளது. மகளிர் கட்டடக்கலை வடிவமைப்பு மற்றும் கட்டுமான பொறியியல் வல்லுனர்களை அங்கீகரிக்கும் வகையில், 2016ல், 'வேட் ஆசியா' அமைப்பு துவங்கப்பட்டது. இந்த அமைப்பு வாயிலாக ஆண்டுதோறும் கட்டுமானத் துறை சார்ந்த பல்வேறு பிரிவுகளில், மகளிர் வல்லுனர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த வகையில், 2024ம் ஆண்டுக்கான, 40 வயதுக்கு உட்பட்ட, சிறந்த இளம் மகளிர் வல்லுனர்கள் தேர்வுக்கான நிகழ்ச்சி, டில்லியில் யாஷூபூமி என்ற இடத்தில், ஆகஸ்ட், 22ல் துவங்கி, 25ம் தேதி வரை நான்கு நாட்கள் நடந்தது. இதில், நிலைத்தன்மை, விருந்தோம்பல், வர்த்தகம், குடியிருப்பு, கட்டடக்கலை உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பாக செயல்படும் மகளிர் வல்லுனர்களை, நடுவர் குழுவினர் தேர்வு செய்தனர். பெங்களூரைச் சேர்ந்த, சம்வத் டிசைன் ஸ்டூடியோ நிறுவனரான ஆர்.ராமலட்சுமிக்கு, 2024ம் ஆண்டுக்கான இளம் கட்டடக்கலை வல்லுனர் விருது வழங்கப்பட்டது. இந்நிறுவனத்தின் இணை நிறுவனரான சுரபி ஷிங்காரிக்கும், இந்த விருது வழங்கப்பட்டது. இதுகுறித்து, ஆர்.ராமலட்சுமி கூறியதாவது: நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுதும் இருந்து, 75 மகளிர் கட்டடக்கலை வல்லுனர்கள், பிரதமர் மோடி முன்னிலையில் கவுரவிக்கப்பட்டனர். இதில், நானும் பங்கேற்றேன். அதைத்தொடர்ந்து தற்போது, 'வேட் ஆசியா' விருது கிடைத்துள்ளது. பாரம்பரிய மற்றும் வரலாற்று அடையாளங்களுடன், கட்டடங்கள் வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறோம். இந்த விருது, இத்துறையில் தொழில்முறை செயல்பாடுகளை மேம்படுத்த, எங்களுக்கு கூடுதல் பொறுப்பை அளிப்பதாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை