மேலும் செய்திகள்
மது ஒழிப்பு மாநாடு: ஸ்டாலின் ஏற்பாடு ஹைஜாக்!
17-Sep-2024
சென்னை : ''ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பது குறித்து, பேச வேண்டிய நேரத்தில் வலுவாக பேசுவோம்,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறினார். சென்னை அறிவாலயத்தில், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, 45 நிமிடங்கள் ஆலோசனை நடத்திய பின், அவர் அளித்த பேட்டி:முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்க பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. பல ஆயிரம் கோடி அன்னிய நேரடி முதலீட்டுக்கான, 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்து, தமிழகம் திரும்பிய முதல்வர் ஸ்டாலினை, வி.சி., சார்பில் சந்தித்து பாராட்டு தெரிவித்தோம். (நடிகர் கமல் வேலையை நீங்க எடுத்துட்டீங்களே...)வரும் அக்டோபர் 2ல், வி.சி., சார்பில், கள்ளக்குறிச்சியில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாடு நடக்க உள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை இலக்கை படிப்படியாக குறைக்க வேண்டும்; அரசியலமைப்பு சட்டம் 47ன்படி, இந்திய அளவில் படிப்படியாக மது விலக்கை கொண்டு வர அனைத்து மாநிலங்களும் முன்வர வேண்டும் என்ற இரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த மாநாடு நடக்கிறது.(அடேங்கப்பா எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க!)மது விலக்கு கொள்கையில், தி.மு.க., நிறுவனர் அண்ணாதுரை உடும்பு பிடியாக இருந்தார். நாடு முழுதும் மது விலக்கை அமல்படுத்தவும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். அதே கருத்தை கொண்டிருந்த கருணாநிதியும், மது விலக்கு கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தி வந்தார்.(அதை ரத்து பண்ணியதும் கருணாநிதி தான் என்பதையும் சொல்லணுமே)இதைப் பின்பற்றி, பவள விழா காணும் தி.மு.க.,வின் தலைவர் ஸ்டாலின், மது விலக்கு கொண்டு வர, மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். இதை வலியுறுத்தி தான் ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தோம்.மனுவை படித்த பார்த்த முதல்வர், 'மது விலக்கு தான் தி.மு.க.,வின் கொள்கை; அதில், மாற்றுக் கருத்து இல்லை. வி.சி., மாநாட்டில், தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதியும், செய்தி தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவனும் பங்கேற்பர் என உறுதி அளித்தார். 'நிர்வாக சிக்கலை கருத்தில் கொண்டு, படிப்படியாக மது விலக்கை நடைமுறைப்படுத்துவோம்' என்றும் கூறினார்.(நம்பிட்டோம் தலைவரே)ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பது வி.சி.,யின் கொள்கை. இது பற்றி, 1999 முதல் பேசி வருகிறோம்; இதை, எப்போதும் பேசிக் கொண்டே இருப்போம். எந்த நேரத்தில், எந்த கொள்கையை வலுவாக பேச வேண்டுமோ; அப்போது பேசுவோம். இது பற்றி இப்போது முதல்வரிடம் பேசவில்லை.(பேசியிருந்தா மட்டும்...)மது ஒழிப்பு மாநாட்டிற்கும், தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை, தேர்தல் அரசியலோடு தொடர்புபடுத்தி திசை திருப்ப வேண்டாம். மது விலக்கில் உடன்படுபவர்கள் மாநாட்டில் பங்கேற்கலாம். தி.மு.க., பங்கேற்பதால், அ.தி.மு.க., என்ன முடிவெடுக்கப் போகிறது என்பது தெரியவில்லை.(அவங்க என்ன முடிவெடுக்கிறது... அதான் மொத்தமா முடிச்சிட்டீங்களே!)தி.மு.க.,வுக்கும், வி.சி.,க்கும் இடையே எந்த விரிசலும் இல்லை; நெருடலும் இல்லை. எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.(அந்தர் பல்டிக்கு அகராதியே நீங்கதான்)இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
17-Sep-2024