உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதியே வேண்டாம் என்று கூறுவதில் என்ன சிரமம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

ஜாதியே வேண்டாம் என்று கூறுவதில் என்ன சிரமம்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் கேள்வி

சென்னை : 'ஜாதியே வேண்டாம் என்று கூறுவதில், தமிழக அரசுக்கு என்ன சிரமம்?' என கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்றம், பள்ளிகள், கல்லுாரிகள், பதிவு செய்யப்பட்ட சங்கங்களில் இடம்பெற்றுள்ள ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா என்பது குறித்து பதில் தெரிவிக்க, மார்ச் 6ம் தேதி வரை கெடு விதித்து உள்ளது.தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்துக்கு, சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி, 'ஜாதியை மேம்படுத்தும் நோக்கத்துடன் துவக்கப்பட்டுள்ள சங்கத்தை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா?' என கேள்வி எழுப்பியிருந்தார்.மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது, பள்ளி, கல்லுாரிகளின் பெயரில் உள்ள ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா என தமிழக அரசின் முடிவை அறிந்து, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் தெரிவிக்கும்படி கடந்த வாரம் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இந்த வழக்கு, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகவில்லை. அரசு தரப்பில் சிறப்பு பிளீடர்கள் கே.கார்த்திக் ஜெகநாத், யு.பரணிதரன் ஆகியோர் ஆஜராகினர். அப்போது, 'அரசின் நிலைப்பாடு குறித்து, பதில் அளிக்க ஒரு வாரம் அவகாசம் வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.இதற்கு கடும் அதிருப்தி தெரிவித்து, நீதிபதி கூறியதாவது: பள்ளிகளில் கூட ஜாதி பாகுபாடுகளை நீக்க, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில், ஒரு நபர் ஆணையத்தை அமைத்து, மாநில அரசு அறிக்கையை பெற்றது.ஆனால், தற்போது பதிவு செய்யப்பட்ட சங்கங்கள், பள்ளி, கல்லுாரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் உள்ள, ஜாதி பெயரை நீக்குவது குறித்து விளக்கம் அளிக்க, ஒரு வாரம்அவகாசம் வேண்டும் என கேட்பது ஆச்சரியம் அளிக்கிறது. இவ்வாறு நீதிபதி கூறினார்.இதையடுத்து, 'அரசுக்கு ஒரு வார அவகாசம் வழங்குகிறேன். அதற்கு மேல் அவகாசம் எதுவும் வழங்கப்பட மாட்டாது. 'ஒரு வாரத்துக்குள் கல்வி நிலையங்களில் உள்ள ஜாதி பெயரை நீக்குவது தொடர்பாக, அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும்' என உத்தரவிட்டு, விசாரணையை மார்ச் 6ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Ethiraj
மார் 01, 2025 02:25

When we have reservation based on e schools or colleges can continue with e names. The community or individual e cannot be removed. If e names to be removed then remove reservation.also which involve constitutional amendment. Caste tem to continue it is fundamental right


ப.சாமி
பிப் 28, 2025 14:28

மனிதர்களை அவர்களின் இரத்தம் எந்த பிரிவை சேர்ந்தது என்ற வகையில் பிரிக்கலாம்.A ,B ,AB ,O ,A-,B-,AB-,O-இவ்வாறு பிரித்தால் யார் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகுபாடு வராது.இதிலும் சூழ்ச்சி செய்ய முடியுமா என்று தெரியவில்லை..


ப.சாமி
பிப் 28, 2025 14:39

A,B,AB,O positive அதே போன்று A,B,AB, O-negative குறியீடு குறித்து இருந்தேன். சரியாக வெளியிடவில்லை.


Gopalan
பிப் 28, 2025 13:32

once you put a full stop to reservation no one is going to care for caste.it is more than seven decades since we got independence.it is shameful that we are still looking for taking census for caste. as a matter of fact all details are already available with the respective State governments .


Balamurugan
பிப் 28, 2025 13:11

அவனுக பொழப்பே ஜாதிய வெச்சி தான் ஓடுது.


Natchimuthu Chithiraisamy
பிப் 28, 2025 12:06

உங்கள் பெயர்களில் மதம் தெரிகிறது எனவே பெயரை az போல் அனைவரும் வைக்க வேண்டும். இன்று ஜாதி வேண்டாம் என்பீர்கள் பிற்கலத்தில் மதம் வேண்டாம் என்பீர்கள். நாட்டின் நடக்கும் குற்றத்தை குறைக்க பாடுபடுங்கள். எடப்பாடி இரு வழக்குகளில் குற்றவாளிகள் பாத்ரூமில் வழுக்கி விழுந்தார்கள் ஒரு மாதம் எந்த குற்ற செய்தியும் வரவில்லை. ஒரு சிறுவன் சகா நண்பனை துப்பாக்கியால் நெற்றியில் சுட்டு கொலை செய்தான் நீதிபதி போலீசை எச்சரித்தார் இவன் பாத்ரூமில் வழுக்கி விழக்கூடாது என்று ....... ......


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 28, 2025 11:57

ஹைகோர்ட்டுக்கு பொழுது போகலை... திண்ணைக்காரன் நாலு பேரை புடிச்சு இழுத்து வெச்சு வம்படி பண்ணுற மாதிரி இருக்குது ......


Natchimuthu Chithiraisamy
பிப் 28, 2025 11:57

நீதிபதியே உங்களுக்கு தனி கழிப்பிட வசதி உங்கள் அலுவலருக்கு தனி கழிப்பிடம் ஏன்? அது போல் தான் ஜாதி இருக்கிறது யாரும் இங்கு அடித்து கொள்வதில்லை. அரசியல் வாதிகள் தங்கள் ஓட்டுக்கு இந்த வார்த்தைகளை பயன்படுத்துகிறார்கள். உங்களுக்கு இது என்ன பலனை கொடுக்கும் என்பது தெரியவில்லை. ஜாதி தன் இனத்தில் திருமணம் செய்ய மட்டுமே ஏன் வடநாட்டு இந்திக்காரனை தன்னோடு சேர்க்க மறுக்கிறீர்கள். பெண்கள் நைஜிரியா காரனை விரும்பினாலும் உங்கள் பெண்ணை அவர்களுக்கு கட்டி கொடுப்பதில்லை.


ஆரூர் ரங்
பிப் 28, 2025 11:21

அரசு உதவிபெறும் பல்கலைக்கழகத்திற்கு அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம் என்று பெயருள்ளது. வேலூரில் கிறிஸ்டின் மருத்துவக் கல்லூரி? அவற்றை மாற்ற கோர்ட் உத்தரவிட முடியுமா? நடக்காத காரியம்.


sridhar
பிப் 28, 2025 10:37

ஏதாவது சமூக பிரச்சினை என்றால் பழி போடுவதற்கு ஒரு அந்தண ஜாதி வேண்டுமே, தேர்தல் நேரத்தில் ஜாதி appeasement செய்ய வேண்டுமே. எப்படி ஜாதி ஒழிப்பது திமுகவினருக்கு ஜாதி கட்டாயம் தேவை.


kulandai kannan
பிப் 28, 2025 10:24

ஜெயின் கல்லூரியின் பெயரை மாற்ற இதே நீதிபதி பரிந்துரைப்பாரா?


sridhar
பிப் 28, 2025 10:33

ஜெயின் என்பது மதம்.


Keshavan.J
பிப் 28, 2025 10:58

ஜெயின் என்பது ஜாதி இல்லை அது மதமாகும். இதை நிக்கணும் என்றல் கிறிஸ்டின், சிக்கிய, ஹிந்து மற்றும் முஸ்லீம் என்ற பெயரில் உள்ள அணைத்து ஸ்கூல், காலேஜ் பெயர்கள் நீக்க வேண்டி வரும். இதற்கு உங்கள் ஒப்பீனியன் என்ன என்று சொல்லுங்கள்


A.C.VALLIAPPAN
பிப் 28, 2025 11:03

you are child which e which religion you don know please go to school and join from LKG . dont give money and pass study and pass from LKG


சமீபத்திய செய்தி