உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விபத்து வழக்கை யார் நடத்துவது? கோர்ட் வாசலில் வக்கீல்கள் அடிதடி

விபத்து வழக்கை யார் நடத்துவது? கோர்ட் வாசலில் வக்கீல்கள் அடிதடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: விபத்து தொடர்பான வழக்கு ஒன்றை நடத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக, எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறி ஞர்களுக்கு இடையே அடிதடி சண்டை ஏற்பட்டது; நாற்காலிகளை துாக்கிப் போட்டு தாக்கியதில், நான்கு பேர் காயம்அடைந்தனர். அவர்கள், ஓமந்துாரார் மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். வழக்கறிஞர்கள் மோதலால், எழும்பூர் நீதிமன்றம், கலவரம் நடந்த இடம் போல காட்சி அளித்தது.

பயங்கர மோதல்

சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:சென்னை எழும்பூரில், தலைமை பெருநகர நீதிமன்றம், விபத்து தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் என, 12க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் உள்ளன. அங்கு நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என, 1,000க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.கொடுங்கையூரைச் சேர்ந்த சகோதரர்களான செந்தில்நாதன், சக்திவேல் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணிபுரிகின்றனர். விபத்து தொடர்பான வழக்கில், எழும்பூர் நீதிமன்றத்திலும் ஆஜராகி வந்தனர். அயனாவரத்தில் நடந்த விபத்து தொடர்பான வழக்கு ஒன்றை நடத்தி வந்தனர். இந்த வழக்கை, எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் விஜயகுமார், விமல், தினேஷ் ஆகியோர் தட்டிப் பறித்துள்ளனர்.செந்தில்நாதன், சக்திவேல் ஆகியோரிடம் வழக்கு நடத்த அனுமதி அளித்த நபரும், பின்வாங்கி உள்ளார். அவரிடம் கேட்டதற்கு, 'எனக்கு எதுவும் தெரியாது; நீங்கள் விஜயகுமாரிடம் பேசிக்கொள்ளுங்கள்' என, கூறிவிட்டு, மொபைல் போனை, 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டார்.

விசாரணை

அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில்நாதன், சக்திவேல், வெளியாட்கள் இருவர், எழும்பூர் நீதிமன்றத்திற்கு வந்தனர். நீதிமன்ற வளாகத்திற்கு உள்ளே நுழை வாயில் அருகே, விஜயகுமார் மற்றும் செந்தில்நாதன் தலைமையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் அமர்ந்து, இப்பிரச்னை தொடர்பாக பேசிக்கொண்டு இருந்தனர். அதில் வாக்குவாதம் ஏற்பட்டு, மோதல் வெடித்து அடிதடியில் இறங்கினர். நாற்காலிகளை துாக்கி வீசி, தாக்குதல் நடத்தினர். இதில் நான்கு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது. எழும்பூர் உதவி கமிஷனர் மனோஜ்குமார் தலைமையில் போலீசார், இரு தரப்பினரையும் கட்டுப்படுத்தி, மோதலை தடுத்து நிறுத்தினர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

எழும்பூர் கோர்ட்டில் இதுவரை...

 கடந்த 1996ல், எழும்பூரில் 10வது குற்றவியல் நீதிமன்ற சாட்சி கூண்டில் நின்ற ரவுடி விஜி, ெஹல்மெட் அணிந்து வந்த மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார் கடந்த 2008ல், வழக்கறிஞர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்ட சில தினங்களில், நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் ரஜினிகாந்த் கொலை செய்யப்பட்டார் 2013ல், நீதிமன்ற வளாகத்தில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கிய சலீம்பாபு என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது  2015ல், வழக்கறிஞர் சங்க தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டபோது, வழக்கறிஞர் ஸ்டாலின் வெட்டிக் கொல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Kanns
ஜூலை 22, 2024 08:55

Judges Not Encouraging direct Parties with Simple Procedures & Encouraging Case-Hungry Advocates be Sacked.


அப்புசாமி
ஜூலை 20, 2024 10:58

தொழில் போட்டி. பெரிய கட்சியில் அமைபாளர், செயலாளர்னு ஆயிடுங்க. நாலஞ்சு பேரை போட்டுத் தள்ளுங்க.


வாய்மையே வெல்லும்
ஜூலை 20, 2024 10:01

ரவுடி வக்கீல்களாக இருப்பனுவ போல.. இவங்க வக்கீல் ரகத்தில் சேர்ப்பதா ?..


Varadarajan Nagarajan
ஜூலை 20, 2024 08:19

சட்டம் படித்து, எல்ல வழக்குகளையும் சட்டப்படி தீர்வுகாணவேண்டிய வக்கீல்கள் அவர்கள் படித்த சட்டத்திற்கு புறம்பாக அடிதடியில் இறங்குவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. தான் படித்த சட்டப்படி நடந்து கொள்ளாத இவர்கள் எப்படி சட்டத்தை நடைமுறைப்படுத்தவோ அல்லது சட்டப்படி வழக்கு நடத்தவோ செய்வார்கள். ; சென்னை சட்டக்கல்லூரி, அடிதடி ரகலைக்கு பெயர்போனது. அது தொழிலும் விரிவடைந்துள்ளது. இப்பொழுதெல்லாம் அரசியல் கட்சிகளோடு இணைந்த வக்கீல் சங்கங்கள் உள்ளதால், அவர்களது நடவடிக்கையும் அரசியல்வியாதிகள் போலவே உள்ளது


Dharmavaan
ஜூலை 20, 2024 09:22

வழக்கறிஞர்களில் நிறைய ரௌடிகள் அடியாட்கள் கேவலம்


GMM
ஜூலை 20, 2024 08:09

மாநிலத்தில் உள்ள நீதிமன்றங்கள் கவர்னர் முழு கட்டுப்பாட்டில், உச்ச நீதிமன்றம் ஜனாதிபதி கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். தீர்ப்புகளை CAG தணிக்கை துறை ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை செய்ய வேண்டும். நீதிமன்ற அதிகாரத்தை ஒழுங்கு படுத்தாமல் அரசியலை ஒழுங்கு படுத்த முடியாது. ஊழலை ஒழிக்க முடியாது.


bgm
ஜூலை 20, 2024 07:44

இவ்ளோ களேபரம் இன்னும் ஒருத்தன் மேல கூட காவல் துறை நடவடிக்கை இல்லை...


Kasimani Baskaran
ஜூலை 20, 2024 07:28

வழக்கை இழந்த செந்தில்நாதன், சக்திவேல் ஆகிய இருவரும் இந்த அடிதடி வழக்கை நடத்தலாம். ஆனால் போக்குவரத்து துறை பற்றி மட்டும் தெரிந்தவர்களுக்கு கிரிமினல் வழக்குகளை நடத்த வைத்தால் நல்ல காமடியாகவும் இருக்கும். வரவர நீதிமன்றங்கள் மீன் சந்தை போல ஆகிவிட்டது...


sankar
ஜூலை 20, 2024 07:06

கண்ணியம் விடைபெற்றுக்கொண்டது


sankaranarayanan
ஜூலை 20, 2024 06:40

நீதி மன்ற வாசலிலேயே நீதிக்காக வாதாடும் வக்கீல்கள் அவர்களுக்குள் அடிதடி என்றால் இனி மக்களுக்காக வாதாடுவது யார் என்றே தெரியவில்லை நீதி எங்கே கிடைக்கும்


rama adhavan
ஜூலை 20, 2024 05:16

இது எந்த மாடல் அடிதடி? மோதலில் ஈடுபட்ட எல்லா வழக்கறிஞர்களையும் இப்படி சொல்ல வெட்கமாய் உள்ளது கைது செய்து, வழக்கறிஞர் லைசென்ஸ்ஐ ரத்து செய்ய வேண்டும். அது எப்படி ஒரு வக்கீலுக்கு கட்சிக்காரர் கொடுத்த வக்காலத்து நாமாவை அடுத்த வக்கீல் கோர்ட்டில் பயன்படுத்த முடியும்? எல்லாமே ரௌடியிஷம் தானா? கோர்ட்டில் கேஸ் தாக்கல் ஆகி இருந்தால் ஜட்ஜ் கேஸ்ஐ தள்ளுபடி செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை