| ADDED : ஜூன் 24, 2024 06:45 AM
சென்னை : முதல்வர் ஸ்டாலினை, அவரது முகாம் அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் நேற்று சந்தித்து பேசினார்.லோக்சபா தேர்தலில், தி.மு.க., --- காங்கிரஸ் கூட்டணி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலினின் முகாம் அலுவலகத்தில், அவரை நேற்று சிதம்பரம் சந்தித்து, தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தார்.தமிழகத்தில் நடந்து வரும் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் மற்றும் தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் பெறுவது; உள்ளாட்சி தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், கள்ளச்சாராய சாவுகள் குறித்தும், அரசு எடுக்க வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தை முறியடிப்பது குறித்தும், சந்திப்பின்போது இருவரும் பேசியதாக கட்சி வட்டாரங்கள் கூறின.