சென்னை: 'காவல் நிலைய விசாரணையில் மரணங்கள் நிகழவில்லை' என, போலீஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.தமிழகத்தில் ஏப்ரல் 5 - 12 வரை, போலீசாரின் காவல் விசாரணையில், நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது குறித்து, போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது: மதுரை மதிச்சியம் போலீசார், ரவுடி கார்த்திக்கை, 32, ஏப்., 2ல் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். மறுநாள் உடல் நலக்குறைவு காரணமாக, அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு நாள் கழித்து சிகிச்சை பலனின்றி இறந்தார்விழுப்புரம் தாலுகா போலீசார், ஏப்., 10ல், சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்ற வழக்கில், சாராய வியாபாரி ராஜாவை, 43, கைது செய்து, பின், காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர். அவர் மீது ஏற்கனவே சாராய வழக்குகள் உள்ளன. வீட்டிற்கு சென்ற பின், நெஞ்சு வலிப்பதாக கூறியதால், அவரது மனைவி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். டாக்டர்களின் பரிசோதனையில், அவர் உயிரிழந்தது தெரியவந்ததுதுாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார், வழக்கு ஒன்றில் சிவகாசியைச் சேர்ந்த ஜெயகுமாரை, 60, கைது செய்து, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். காசநோய் காரணமாக பாளையக்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு, அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.மூச்சுத்திணறல் இருப்பதாக கூறியதால், பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். டாக்டர்கள் பரிசோதனையில் அவர் வரும் வழியில் உயிரிழந்தது தெரியவந்ததுஆவடி கமிஷனர் அலுவலகத்தின் செவ்வாய்பேட்டை போலீசார், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரைச் சேர்ந்த ரவுடி சாந்தகுமார், 30; அவரது கூட்டாளிகள், ஆறு பேரை கைது செய்தனர். அவர்கள் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. விசாரணையின் போது, சாந்தகுமார் நெஞ்சு வலிப்பதாக கூறியதால், திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்து விட்டார்.பிரேத பரிசோதனையில் அவருக்கு, இதயத்தில், 90 சதவீதம் அடைப்பு இருந்தது தெரியவந்தது. அலட்சியமாக இருந்தது தொடர்பாக, இன்ஸ்பெக்டரும், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். நான்கு சம்பவங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது. காவல் துறையை குறைகூறும் வகையில், எவ்வித காவல் விசாரணை மரணங்களும் நடக்கவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.