உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மீனவர் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுக்குமா?

மீனவர் மீதான தாக்குதலை மத்திய அரசு தடுக்குமா?

சென்னை : தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை பேட்டி:கடந்த 2014ல் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், இந்திய மீனவர்களுக்கு இலங்கை அரசாலும், அங்கிருக்கும் மீனவர்களாலும் எந்த பிரச்னையும் வராது; என்று பா.ஜ.,வினர் சொன்னார்கள். அதேபோல, கடல் தாமரை மாநாட்டில், 'சர்வதேச கடல் எல்லை பகுதியில் இந்தியாவின் கப்பல் படை நிறுத்தப்பட்டு, மீனவர்களுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்படும் என உறுதி அளித்தனர். ஆனால், எதுவுமே நடக்கவில்லை. எனவே, இதன் மீதெல்லாம் மத்திய அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ