உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பூரண மதுவிலக்கை தேர்தலுக்காக வலியுத்துவதா?

பூரண மதுவிலக்கை தேர்தலுக்காக வலியுத்துவதா?

அருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்., 16ல் பேரணி சென்று தலைமை செயலகத்தை முற்றுகையிட உள்ளோம். பூரண மதுவிலக்கை, தேர்தலுக்காக பயன்படுத்தக்கூடாது. தமிழகத்தில் இருந்து மதுவை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க., பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரிக்கை விடுத்தது. மது விற்பனை இல்லை என்றால் ஆள முடியாது என, தி.மு.க., - அ.தி.மு.க., நினைத்துக் கொண்டிருக்கின்றன. திரைத்துறையால் தமிழகத்தில் அரசியல் மாசடைந்துள்ளது. அரசியலுக்கு வரக்கூடாது என நடிகர் விஜயை தடுக்க முடியாது. அவரை ஏற்பதும், ஏற்காததும் மக்கள் கையில் உள்ளது. உதயநிதியை துணை முதல்வர் ஆக்குவதில் எந்த தவறுமில்லை.

-- கிருஷ்ணசாமி தலைவர், புதிய தமிழகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை