புதுச்சேரியில் மகளிர் உதவித்தொகை ரூ.2,500
புதுச்சேரி:புதுச்சேரி சட்டசபையில் 13,600 கோடி ரூபாய்க்கு வரியில்லாத பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வர் ரங்கசாமி, குடும்பத்தலைவிக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை 2,500 ரூபாயாக உயர்வு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.புதுச்சேரி 15வது சட்டசபையில் 6வது கூட்டத் தொடர் கடந்த 10ம் தேதி தொடங்கியது. கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்து உரையாற்றினார். இரண்டாம் நாளான நேற்று முன்தினம் 11ம் தேதி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏ.,க்கள் பேசினர்.மூன்றாம் நாளான நேற்று சட்டசபை காலை 9:30 மணிக்கு கூடியது. சபாநாயகர் செல்வம் திருக்குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைத்து, 2025-26ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்ய அழைப்பு விடுத்தார்.அதைத் தொடர்ந்து நிதித்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, 2025-26ம் ஆண்டிற்கான ரூ.13,600 கோடிக்கு வரியில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். காலை 9:32 மணிக்கு, பட்ஜெட் உரையை படிக்கத் தொடங்கிய முதல்வர் 10:42 மணிக்கு நிறைவு செய்தார்.பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்த முக்கிய திட்டங்கள்:1குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர உதவித் தொகை ரூ.1,000ல் இருந்து ரூ.2,500 ஆக உயர்வு2விவசாய தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணம் ஆண்டிற்கு ரூ.2,0003ரேஷன் கார்டிற்கு இலவச அரிசியுடன் மாதம் 2 கிலோ கோதுமை இலவசம்.4பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தில் வாரத்திற்கு 3 நாட்கள் வழங்கப்படும் முட்டை மற்றும் வாரத்திற்கு இரண்டு நாள் வழங்கப்பட்டு வரும் மாலை சிறுதானிய சிற்றுண்டி திட்டம் வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து பள்ளி நாட்களிலும் வழங்கப்படும்.5அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்து இளநிலை கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, மாதம் 1,000 வீதம் ஊக்குவிப்பு தொகை மூன்றாண்டிற்கு வரும் கல்வி ஆண்டு முதல் வழங்கப்படும்.இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தனது பட்ஜெட் உரையில் பல அறிவிப்புகளை வெளியிட்டார்.