உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தமிழகத்தில் இன்று (மே 01) 20 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மேற்குவங்கம், பீஹார், ஒடிசாவில் இன்றும், நாளையும் கடும் வெப்ப அலை வீசும் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீசுவதற்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மதுரை ஆகிய 20 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்களுக்கு ஒரே நேரத்தில் வெப்ப அலை, மிதமான மழை பெய்யும் என இருவேறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி