உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இளைஞர்கள் படிப்புடன், விளையாட்டையும் இணைத்துக் கொள்ளுங்கள்: முதல்வர் ஸ்டாலின் "அட்வைஸ்"

இளைஞர்கள் படிப்புடன், விளையாட்டையும் இணைத்துக் கொள்ளுங்கள்: முதல்வர் ஸ்டாலின் "அட்வைஸ்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள் என முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.தமிழகத்தை சேர்ந்த செஸ் வீரர் குகேஷ் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த புகைப்படத்தை எக்ஸ் சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மிக இளம் வயதில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் வெற்றிவாகை சூடி, அனைவரின் புருவத்தையும் உயர்த்தச் செய்து, தாயகம் திரும்பியுள்ள நமது குகேஷூக்கு 75 லட்ச ரூபாய் உயரிய ஊக்கத்தொகையையும் கேடயத்தையும் அளித்து வாழ்த்தி மகிழ்ந்தேன்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8ul7lx0p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

பாராட்டுகள்

கல்வியுடன் சேர்த்து அனைத்து விளையாட்டுகளையும் ஊக்குவித்து, தமிழகத்தில் இருந்து மேலும் பல சாதனையாளர்கள் உருவாக உழைத்து வரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கும், அத்துறை அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகள். இளைஞர்கள் படிப்புடன், ஏதேனும் ஒரு விளையாட்டையும் தங்கள் அன்றாட வழக்கங்களில் இணைத்துக் கொள்ளுங்கள். உங்கள் உடலையும் மனதையும் விழிப்புடனும் சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ள அது உதவும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

அரவழகன்
ஏப் 29, 2024 10:16

பிடிப்போடு விளையாடி ஊட்டச்சத்து வேண்டி கோதுமை பீர் அருந்துவீர் விடியல் அரசு


A1Suresh
ஏப் 28, 2024 23:33

பாரதியார் பாட்டையே மாற்றிவிட்டார்கள் காலை எழுந்தவுடன் டாஸ்மாக் பின்னர் கனிவு தரும் நல்ல கஞ்சா மாலை முழுதும் நல்ல மெத்தபடைன் என்று பழக்க படுத்திக்கொள்ளு பாப்பா ஓடி விளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா


Sree
ஏப் 28, 2024 22:30

ஆனாள் வெளிமாநில விளையாட்டு போட்டிக்கு தமிழக மாணவர்களை அனுப்ப மாட்டோம்


sridhar
ஏப் 28, 2024 21:50

கஞ்சா படிப்பு , டாஸ்மாக் விளையாட்டு


sankaranarayanan
ஏப் 28, 2024 20:24

அப்பாவுடன் சேர்ந்து அரசியலில் புள்ளையாண்டானும் அரசியலில் இருக்கவேண்டி செய்யும் அறிவிப்பு இது


Ramesh Sargam
ஏப் 28, 2024 20:15

ஒரு பக்கம் ஊர்பூரா டாஸ்மாக் கடைகள் திறந்துவைப்பாராம் போதாததற்கு வேறு ஒரு பக்கம் போதைப்பொருள் விநியோகம் செய்வாராம் இவைகளை மீறி, எப்படி மாணவர்கள் படிப்புடன், விளையாட்டையும் இணைத்து வாழ்க்கையில் முன்னேற முடியும்?


J.V. Iyer
ஏப் 28, 2024 20:00

இவர்களைப்போல மக்களின் வாழ்க்கையில் விளையாடாதீர்கள் சின்னவர் போல விளையாட்டுத்தனமாக இருக்காதீர்கள்


ஆரூர் ரங்
ஏப் 28, 2024 19:59

நான் வீல்சேர் கிரிக்கெட் விளையாட விரும்புகிறேன். ஊக்குவிக்க விலையில்லா கோப்பை தருவீர்களா ?


Cheran Perumal
ஏப் 28, 2024 19:45

படிக்கும் சமயத்தில் அதை விட்டுவிட்டு வெறும் விளையாட்டிலேயே பொழுதைக்கழித்த இவர் சொல்லும் அறிவுரை வேடிக்கையானது இவர் என்ன விளையாட்டு விளையாடினார் என்று வெளியே சொன்னால் வெட்கக்கேடு


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஏப் 28, 2024 18:49

அப்பிடியே இந்த டாஸ்மாக் வீரன், கோதுமை பீர், போதை மாத்திரை, கஞ்சா, அபின், கோகெய்ன் இதெல்லாமும் சேர்த்துக்க சொல்லுங்க அப்பத்தான் எளிதில் கட்சி அடிப்படை உறுப்பினர் ஆகமுடியும்


மேலும் செய்திகள்