உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 10 படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி; நயினார் நாகேந்திரன் கண்டனம்

தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 10 படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி; நயினார் நாகேந்திரன் கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 10 படுகொலைகளால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை; https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4uhzy1ff&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழகத்தில் 24 மணி நேரத்தில் மட்டும் 10 படுகொலைகள் நடந்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மக்களை அச்சத்தில் உறைய வைத்துள்ளன. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆசிரியர் குத்திக் கொலை, நகைக்காக மூதாட்டி ஒருவர் கழுத்தை நெரித்துக் கொலை, மதுபோதையில் இளைஞர் ஒருவர் கொடூர கொலை என நீளும் இந்தப் பட்டியலில் கொலையுண்டவர்களில் பாதி பேர் பெண்கள் என்பதும், மீதி கொலைகளின் பிண்ணனியில் போதை இருப்பதும் அலங்கோல ஆட்சிக்கான அவலச் சான்றுகள்.பழுதடைந்து கிடக்கும் அரசு இயந்திரத்தினால் குற்றவாளிகளுக்கு குளிர்விட்டுப் போய்விட்டது. மக்களுக்கு ஆளும் அரசின் மீது நம்பிக்கை இத்துப்போய் விட்டது. இந்த லட்சணத்தில் நாடு போற்றும் நல்லாட்சி என வெற்று விளம்பரங்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தி.மு.க., தலைவர்கள் கொஞ்சம் கூட சிந்தித்துப் பார்க்கவில்லையா? ஊர் ஊராக சென்று மக்களின் குறைகளைத் தீர்க்க மனு வாங்குவதாகக் கூறிக்கொள்ளும் முதல்வர் ஸ்டாலின், முதலில் தமிழகத்தில் தினந்தோறும் நடக்கும் கொலைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.தனது ஆட்சியில் என்ன நடக்கிறது என்பது தெரியாத ஒருவர், தனது ஆட்சியின் அவலங்களை நம்ப மறுக்கும் ஒருவர் முதல்வர் அரியணையில் தொடரலாமா?அமைதிப் பூங்காவாகத் திகழ்ந்த தமிழகத்தை இன்று ஆயுதங்களின் கிடங்காகவும் கொலைகளின் கூடாரமாகவும் மாற்றிய திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றினால் மட்டுமே இங்கு அறம் மலரும், சமூக நல்லிணக்கம் சாத்தியமாகும்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Padmasridharan
ஜூலை 22, 2025 10:08

அவரென்ன செய்வார் பாவம் சாமி. முதல் குற்றவாளி மது.. இரண்டாம் குற்றம் மது-மாதுவுக்காக மக்களிடம் அதட்டி மிரட்டியடித்து பணம்/பொருள் புடுங்கும் பிச்சைகாரர்களின் அரசதிகாரம்.. மதுவ ஒழிங்க.. அரசதிகாரத்தை suspend / transfer பண்ணாம DiSmiSS பண்ணுங்க.


N Sasikumar Yadhav
ஜூலை 22, 2025 02:28

கோபாலபுர கொத்தடிமைகள் எதற்கெடுத்தாலும் கேவலமான முட்டு கொடுப்பதையே மானங்கெட்ட தொழிலாக வைத்து கொண்டிருக்கிறானுங்க . இதுபோன்ற சம்பவங்கள் கோபாலபுர கொத்தடிமைகள் வீட்டில் நடந்தால் இப்படித்தான் மானங்கெட்ட முட்டு கொடுப்பார்களோ என்னவோ


T.sthivinayagam
ஜூலை 21, 2025 21:02

தமிழகம் பாஜாகா ஆளும் மாநிலங்களை போல மாறிக்கொண்டுள்ளது


Kjp
ஜூலை 21, 2025 21:51

ஆமாம்.முதல்வர் ஆட்சி செய்வது திராவிட மாடல் ஆட்சி அல்ல.பாஜக மாடல் ஆட்சி அப்படித்தானே.


Karthikeyan
ஜூலை 21, 2025 19:51

ஆளும் அரசுக்கு கெட்டபெயர் ஏற்படுத்த வேண்டுமென்று திட்டமிட்டு இதுபோன்ற செயல்களை செய்வதே உங்க கட்சி நபர்கள்தான்..


ஆசாமி
ஜூலை 21, 2025 20:36

புளுகறதே பிழைப்பு போல


vivek
ஜூலை 21, 2025 20:40

அப்போ அதை கண்டுபிடிச்சு கைது பண்ணலாமே


தாமரை மலர்கிறது
ஜூலை 21, 2025 19:04

சட்டம் ஒழுங்கு அழுகிவிட்டது. தமிழ்நாடு என்ற பெயரை படுகொலை பிரதேசம் என்று மாற்றுவது நல்லது. பராபர்ட்டி ரசீதை கொடுக்க எழுபத்தைந்தாயிரம் ரூபாய் லஞ்சம். தேர்தல் முறையாக நடக்க, ஊழலில் மூழ்கிய தமிழக அரசை உடனடியாக கலைக்கப்படவேண்டும்.


சமீபத்திய செய்தி