உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 சதவீதம் ஓட்டு போயிருச்சு; அதெல்லாம் மீட்கணும்; ஆதங்கப்படுகிறார் இ.பி.எஸ்.,

10 சதவீதம் ஓட்டு போயிருச்சு; அதெல்லாம் மீட்கணும்; ஆதங்கப்படுகிறார் இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '10 சதவீத ஓட்டுகளை இழந்துவிட்டோம். அதனை மீட்கும் வகையில் செயல்பட வேண்டும்' என அ.தி.மு.க., ஆலோசனை கூட்டத்தில் அக்கட்சி பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசினார்.சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் இ.பி.எஸ்., ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில், அவர் பேசியதாவது: இப்போது 40 சதவீத ஓட்டுகள் இளைஞர்கள் கையில் உள்ளன. அதை அ.தி.மு.க., பெற வேண்டும். இளைஞர்கள் என்ன விரும்புகின்றனர் என்பதை புரிந்து அதற்கேற்றவாறு செயல்பட வேண்டும்.

10 சதவீத ஓட்டுகள்

இளைஞர்கள் ஓட்டு பெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும். தேர்தலுக்கு 15 மாத காலம் தான் உள்ளது, நீங்கள் எந்தளவிற்கு பணி செய்கிறீர்களோ அந்தளவிற்கு வலிமை கிடைக்கும். இளைஞர்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு, பேஸ்புக், எக்ஸ் தளம் மட்டுமின்றி வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட வேண்டும். யாருக்கும் அஞ்சாமல் கண்ணியத்துடன் சமூகவலைதளத்தில் பதிவிட வேண்டும். 10 சதவீத ஓட்டுகளை இழந்துவிட்டோம். அதனை மீட்கும் வகையில் செயல்பட வேண்டும். இவ்வாறு இ.பி.எஸ்., பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Ramesh
அக் 02, 2024 08:12

இளைஞர்கள் ஒரு வோட்டுக்கு தலா ஒரு லட்சம் கேட்கிறோம் கொடுங்கள்


Vijay D Ratnam
அக் 01, 2024 22:41

எடப்பாடி பழனிசாமி ஐயா அவர்களே, திமுக பாஜக கள்ள உறவை விமரிசிப்பதில் பேசுவதில் உங்களுக்கு என்ன தயக்கம். போட்டு தாக்கவேண்டாமா.


Jagan (Proud Sangi)
அக் 01, 2024 21:35

விஜய், காங், கம்யூனிஸ்ட் மற்றும் சீடாஸ் சேரும் போல தெரியுது.சீடாஸ் மற்றும் காங்கி பேச்சை பார்த்தால் உண்டியல் குலுக்கிகளுக்கு காசே பிரதானம். பசையுள்ள இடத்தில ஒட்டுவார்கள். சீமான் சேருவாரா என்று தெரியவில்லை. சீமானும் சேர்ந்தால் அதிமுகவிற்கு சங்கு தான். பா ஜ ரெண்டு தேர்தல் தோத்தால் கூட வண்டி ஓடும். மெகா கூட்டணி இல்லாம அதிமுக கூடாரம் சுத்தமா காலி தான்.


Rajkumar
அக் 01, 2024 20:27

வாய்ப்பில்ல ராஜா. தமிழ் நாட்டில் பிரச்சனைகள் அதிகம் எல்லா பொருட்கள் விலை ஏற்றம். ஆனால் எதிர்கட்சி தலைவர் எந்த action னும் இல்லை. எப்படி ஒட்டு விழும். ஸ்டாலின் எவ்வளவு போராட்டம் பன்னினார்.


பேசும் தமிழன்
அக் 01, 2024 18:25

நீங்கள் முஸ்லீம் மதவாத கட்சியுடன் கூட்டணி வையுங்கள் ....மக்கள் மறுபடியும் உங்களை வச்சி செய்வார்கள் .


Jagan (Proud Sangi)
அக் 01, 2024 18:19

இவர் கையில் அதிமுங்க இருப்பது பாஜ விற்கு நல்லது. அம்மா கட்சியை அழிக்காமல் விடமாட்டார் போல...


Barakat Ali
அக் 01, 2024 18:19

மத்தியில் பாஜகவோ, மாநிலத்தில் திமுகவோ இரண்டுக்குமே வலுவான, ஆக்கபூர்வமான எதிர்க்கட்சிகள் தேவை ....... ஆனால் துரதிருஷ்ட வசமாக அப்படி இல்லை ......


ramesh
அக் 01, 2024 17:53

ஈகோ வை விட்டு பன்னீர் செல்வத்துடன் சேர்ந்தால் எதிர் கட்சி வரிசையிலாவது உட்காரலாம் .இல்லை என்றால் முத்துவும் இல்லாமல் போகும்


K.Ramachandran
அக் 01, 2024 17:31

முன்னேற்றம் தான். லோக் சபா தேர்தலில் 1 சதவீதம் ஏறியது வோட் என்று சொல்லாமல், 10 சதவீதம் குறைந்தது என்று ஒத்து கொண்டுள்ளார். இதான் முதல் படி - இனி கல பனி செய்ய வேண்டியது தான் தேவை


venugopal s
அக் 01, 2024 16:53

முதலில் இ பி எஸ் களத்தில் இறங்கி வேலை செய்ய வேண்டும். ஆனால் இவரோ ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்.இப்படியே போனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சியே காணாமல் போய் விடும் போல உள்ளதே !


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை