உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை சந்திரகாச்சி உட்பட 10 ரயில்கள் ரத்து

சென்னை சந்திரகாச்சி உட்பட 10 ரயில்கள் ரத்து

சென்னை : ரயில் தண்டவாள மேம்பாடு பணி காரணமாக, சென்னை சென்ட்ரல் - சந்திரகாச்சி உட்பட, 10 ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஹவுரா - திருச்சி ரயில் வரும், 12, 15, 19ம் தேதிகளிலும்; திருச்சி - ஹவுரா ரயில் வரும், 10, 13, 17ம் தேதிகளிலும்; சந்திரகாச்சி - சென்னை சென்ட்ரல் 'ஏசி' ரயில் வரும், 10, 13, 17ம் தேதியிலும்; சென்னை சென்ட்ரல் - சந்திரகாச்சி, 'ஏசி' ரயில் வரும், 12, 15, 19ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுகிறது கன்னியாகுமரி - ஹவுரா ரயில் வரும், 14; ஹவுரா - கன்னியாகுமரி ரயில் வரும், 16ம் தேதி; ஹவுரா - புதுச்சேரி ரயில் வரும், 8, 15ல், புதுச்சேரி - ஹவுரா ரயில் வரும், 11, 18ல் ரத்து செய்யப்படுகிறது  ஷாலிமார் - சென்ட்ரல் ரயில், வரும் 10, 17ம் தேதிகளிலும்; சென்னை சென்ட்ரல் - சாலிமார் ரயில் வரும், 11, 18ம் தேதிகளிலும் ரத்து செய்யப்படுவதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி