உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்; தமிழக அரசு அறிவிப்பு

முதல்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்; தமிழக அரசு அறிவிப்பு

சென்னை; தமிழகத்தில் முதல்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் கூறியுள்ளபடி, தொகுப்பூதிய செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த போராட்டம் இன்று 6வது நாளை எட்டியது.போராட்டம் தீவிரம் அடைய, சுகாதார அமைச்சர் மா. சுப்ரமணியன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந் நிலையில் முதல்கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் வெளியிட்டுள்ளார். மீதம் உள்ள ஒப்பந்த செவிலியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.அரசின் முடிவினை ஏற்று செவிலியர்கள் தங்கள் போராட்டத்தை முடித்துக் கொள்கிறார்கள் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ