மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
1 hour(s) ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
சென்னை:தமிழகத்தில் பிரதமர் மோடி இருப்பதால் சென்னை முதல் ராமேஸ்வரம் வரை 1076 கி.மீ. நீளமுள்ள கடலோர பகுதிகளில் 7500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பிரதமர் மோடி அரசு முறை பயணமாக 2 நாட்கள் தமிழகம் வந்துள்ளார். அவரது வருகையை ஒட்டி மாநிலம் முழுதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை திருவொற்றியூர் முதல் ராமேஸ்வரம் வரை 1076 கி.மீ. நீள கடலோர பகுதிகளில் 7500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும அதிகாரிகள் கூறுகையில் 'பிரதமர் வருகையை ஒட்டி 2 முறை கடலோர பகுதி பாதுகாப்பு குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டது.அதன் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளி நபர்கள் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. அதிநவீன படகில் ரோந்து பணி முடுக்கி விடப்பட்டுள்ளது' என்றனர்.
1 hour(s) ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago