உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்

சென்னை: சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் அரங்கம் அருகே, ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்கக் கோரி, '108' ஆம்புலன்ஸ் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, கூட்டமைப்பினர் கூறியதாவது: மக்களின் உயிர் காக்கும் பணி செய்யும் எங்களுக்கு, நியாயமாக ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். தீபாவளி போனஸ், 18,000 ரூபாய் வழங்க வேண்டும். மருத்துவ காப்பீட்டு தொகையை, 2 லட்சம் ரூபாயில் இருந்து, 10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு ஆம்புலன்ஸ் திட்டங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, வருங்கால வைப்பு நிதி கணக்குகளை, ஆந்திரா மாநிலத்திற்கு மாற்றியதை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை