உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 30 சதவீத ஊதிய உயர்வு தராவிட்டால் வேலை நிறுத்தம்: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அறிவிப்பு

30 சதவீத ஊதிய உயர்வு தராவிட்டால் வேலை நிறுத்தம்: 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

விலைவாசி உயர்வு அடிப்படை யில், 30 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும். இல்லையெனில், அக்டோபரில் வேலைநிறுத்தத்தில் ஈடு படுவோம்' என, '108' ஆம்புலன்ஸ் தொழிலா ளர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில், 1,300க்கும் மேற்பட்ட, '108' ஆம்புலன்ஸ்கள் உள்ளன; அவற்றில், 7,000த்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இச்சேவையை, இ.எம்.ஆர்.ஐ., - ஜி.எச்.எஸ்., நிர்வாகம் பராமரித்து வருகிறது. அடிப்படை வசதி போதுமான அடிப்படை வசதிகள், சம்பள உயர்வு வழங்காதது என, இந்நிர்வாகம் மீது தொழிலாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரையில் நேற்று, '108' ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் சங்க மாநில காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். பொதுச்செயலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் பேசிய தாவது: தொழிலாளர்களுக்கு, 16 சதவீதத்திற்கு குறைவாக ஊதிய உயர்வு வழங்கக்கூடாது என, தமிழக அரசுடன், இ.எம்.ஆர்.ஐ., நிர்வாகம் ஒப்பந்தம் செய்தது. சட்டவிரோதம் அதை பின்பற்றாமல் தன்னிச்சையாக முடிவு செய்து, குறைவாக ஊதியம் வழங்கி தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது சட்டவிரோதம். 2025 - 26 ஊதிய உயர்வை விலைவாசி உயர்வுக்கு ஏற்ப, 30 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும். இதுகுறித்து அரசிடம் நடத்தும் பேச்சில் உடன்பாடு ஏற்படாதபட்சத்தில், அக்டோபரில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடு வோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதை வலியுறுத்தி தீர்மானமும் நிறை வேற்றப்பட்டது. கூட்டத்தில் துணைத்தலைவர் சரவ ணன், ஜெயக்குமார், பொருளாளர் சாமிவேல் உள்ளிட் டோர் பங்கேற் றனர் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை