ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் விடுமுறை
சென்னை:தமிழக அரசு 2025ல், ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உட்பட, 24 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது. ரேஷன் கடைகளில் மக்களுக்கு அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. எனவே, 2025ல், ரேஷன் கடைகளுக்கு, 11 நாட்கள் மட்டும் விடுமுறை அறிவித்து, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.