உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாயுமானவர் திட்ட பயனாளிகளில் திருப்பூரில் 119 பேர் உயிருடன் இல்லை!

தாயுமானவர் திட்ட பயனாளிகளில் திருப்பூரில் 119 பேர் உயிருடன் இல்லை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 'தாயுமானவர்' திட்ட பயனாளிகளில் 119 பேர் உயிருடன் இல்லாதது, வீடு தேடி ரேஷன் பொருள் கொண்டு சென்றபோது தெரிய வந்தது.தமிழகத்தில், தனிநபர் ரேஷன் கார்டு பெற்ற மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, வீடு தேடி ரேஷன் பொருள் வினியோகிக்கும் தாயுமானவர் திட்டம் நடை முறையில் உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், தாயுமானவர் திட்டத்தில் 71,371 பேர், பயனாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வினியோகிக்கப் படுகின்றன.ஆக., மாதத்தில் பயனாளிகள் பட்டியலில் உள்ளவர்களில், 49,036 பேர் வீடுகளிலும், நேரடியாக கடைகளுக்கு சென்றும் பொருட்கள் வாங்கி உள்ளனர். வீடு பூட்டப்பட்டது, வெளியூர் சென்றது, இடம் மாறியது, உயிரிழப்பு உள்ளிட்ட காரணங்களால், பயனாளிகள் பட்டியலில் உள்ளவர்களில், 22,335 பேர், ஆக., மாதம் பொருள் பெறவில்லை. மாவட்ட வழங்கல் பிரிவினர் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில், 71,371 பேர், தாயுமானவர் திட்டத்தில் வீட்டிலேயே ரேஷன் பொருள் பெறும் பயனாளிகளாக உள்ளனர்.'இவர்களில், கடந்த ஆக., மாதம், 49,036 பேர் ரேஷன் பொருள் பெற்றுள்ளனர்; 22,335 பேர் பொருட்கள் பெறவில்லை. 'தாயுமானவர் திட்டத்தில் ரேஷன் பொருள் பெறாதோரில், 119 பேர் உயிரிழந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால், இறந்தவர்களின் கார்டுகளை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

Padmasridharan
செப் 26, 2025 19:25

இங்கே நடமாடும் குடி மக்கள் மட்டும் உயிருடன் இருக்கிறார்களா சாமி. அரசதிகார பிச்சைக்காரர்களால் பணம்/பொருள் பிடுங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்களால் அரசுக்கும் அவர்கள் சீருடைக்கும் அவலம்


baala
செப் 26, 2025 10:13

இது போன்ற தில்லுமுல்லுகளை செய்வோரின் குடும்ப அட்டையை நீக்கலாம்.


Shobhana S
செப் 25, 2025 22:09

119 பேர் உயிரோடு இல்லை என்றால், கை ரேகை இருந்தால் தான் பொருள் வாங்கமுடியும்.இறக்கும் போது ஆதார் எண்ணை வாங்கி govt. எல்லா card cancel செய‌ய்யவும்.


என்றும் இந்தியன்
செப் 25, 2025 16:53

கழகம்னா சும்மாவா??? பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய் ஒன்றையே வைத்து உருட்டும் கழகம்னா சும்மாவா???


Rathna
செப் 25, 2025 16:42

இப்போது தான் தெரிகிறது டெல்லி இளவரசன் எலெக்க்ஷன் கமிஷன் SIR வாக்காளர் பட்டியலை திருத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறான் என்பது


G Sundaresan
செப் 25, 2025 16:36

ஆதார் கார்டு இறப்பின் போது பதிந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்து இருந்தால் தானாக நீக்கி விடுவார்கள்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
செப் 25, 2025 14:01

தேர்தலில் ஓட்டு போட்டார்களா இல்லையா என்று சொல்லப்போவது யார்


vbs manian
செப் 25, 2025 12:53

எத்தனை பேர் வோட்டு போடுகிறார்கலோ


ஆரூர் ரங்
செப் 25, 2025 11:08

இறந்த பிறகும் எத்தனை பேர் எத்தனையோ ஆண்டுகளாக ரேஷன் பொருட்களை பெற்றார்கள்? அதற்கெல்லாம் நடவடிக்கை இருக்காது. போலி ரேஷன் கார்டு வைத்திருந்த ஆட்கள் யாருமே கைது செய்யப்பட்ட செய்திகள் வரவில்லை.


Rathinasabapathi
செப் 25, 2025 12:54

தம்பி ஓட்டு திருடங்க தெரியுமா?


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 25, 2025 10:40

ஆபத்தான கட்சி.. அதே சமயம் காமெடி பண்ணும் கட்சி.. இப்படிச் சொல்லலாமா >>>>


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை