வாசகர்கள் கருத்துகள் ( 1 )
எனது ஓட்டு பாஜக ???
மேலும் செய்திகள்
வாக்காளர் பட்டியலில் மா.கம்யூ., சந்தேகம்
1 hour(s) ago
ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு தே.மு.தி.க., வலியுறுத்தல்
1 hour(s) ago
தி.மு.க., ஆட்சியில் அனைவருக்கும் துயரம்
1 hour(s) ago
சென்னை: 'வாக்காளர் அடையாள அட்டை அளிக்க இயலாத வாக்காளர்கள், மாற்று அடையாள ஆவணங்கள் 12ல் ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம்' என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.அதன் விபரம்:
ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி மற்றும் தபால் கணக்கு புத்தகங்கள், தொழிலாளர் நல அமைச்சக திட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை.இது தவிர, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ், இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்.எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகள், மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட, இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம்.தேர்தல் கமிஷன் சார்பில் வழங்கப்படும் 'பூத் சிலிப்' அடையாள அட்டையாக ஏற்றுக் கொள்ளப்படாது. ஒரு தொகுதி வாக்காளர், பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை, வேறொரு தொகுதியில் அடையாள அட்டையாக காண்பிக்கலாம்.ஆனால், அந்தத் தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள், ஓட்டளிக்க இயலாது.
எனது ஓட்டு பாஜக ???
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago