உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் காரை மறித்து 1.25 கிலோ தங்கம் கொள்ளை; கும்பலுக்கு போலீசார் வலை

கோவையில் காரை மறித்து 1.25 கிலோ தங்கம் கொள்ளை; கும்பலுக்கு போலீசார் வலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் காரை மறித்து 1.25 கிலோ தங்கத்தை பறித்து கொண்டு தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்தவர் ஜெய்சன் ஜேக்கப், 53. இவர் நகை செய்து நகைக் கடைகளுக்கு விற்பனை செய்பவர். இவர் சென்னை சவுகார்பேட்டையில் 1.25 கிலோ தங்கத்தை வாங்கினார். அவரும், அவரிடம் வேலை பார்க்கும் விஷ்ணு என்பவரும் இந்த தங்கத்தை சென்னையில் இருந்து கோவை கொண்டு வந்து, கேரளாவுக்கு கொண்டு சென்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fcdb678g&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர்களது கார் கோவையிலிருந்து கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. மதுக்கரை அடுத்த எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே சென்றபோது லாரியில் வந்த ஐந்து பேர் கும்பல் காரை வழிமறித்தது. காரின் இருபுறமும் கண்ணாடியை உடைத்து தாக்கிய கும்பல், ஜெய்சன் ஜேக்கபை மிரட்டி கீழே இறக்கிவிட்டனர். அவர் வைத்திருந்த தங்கத்தையும் பிடுங்கிக் கொண்டனர். பின்னர் கார் மற்றும் லாரியை எடுத்துக்கொண்டு தங்கத்துடன் அந்த கும்பல் தப்பியது. இந்த சம்பவம் இன்று (ஜூன் 14) காலை 6:45 மணிக்கு நடந்துள்ளது.ஜேக்கப் மற்றும் விஷ்ணு ஆகியோர் நடந்த சம்பவம் பற்றி க.க.சாவடி போலீசில் புகார் அளித்தனர். கார், லாரி, தங்கத்துடன் கேரளாவுக்கு தப்பிய கும்பலை, போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

lana
ஜூன் 14, 2025 14:11

இதெல்லாம் சீக்கிரமே கண்டு பிடித்து விடுவார்கள். என்ன ஒன்னே கால் கிலோ நகை சற்றே குறைந்து கால் கிலோ ஆகி விடும்.


sridhar
ஜூன் 14, 2025 12:40

It’s a free for all in TN now. Appa is inept , corrupt and bereft of ideas.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
ஜூன் 14, 2025 12:32

கர்த்தரின் சீடர் விடியல் சார் வாழ்க


Tiruchanur
ஜூன் 14, 2025 11:14

The Vidiyal ஆட்சி. நான்காண்டே ஸாக்ஷி


Nagarajan D
ஜூன் 14, 2025 11:07

1992 குண்டு வெடிப்பில் தேடப்படும் குற்றவாளியையே இவனுங்க இன்னும் தேடிட்டு இருக்கானுங்க 2025 வருஷ குற்றவாளியை எப்ப கண்டுபிடிப்பானுங்க? 3035 லா


VSMani
ஜூன் 14, 2025 12:01

3025 இல்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை