உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்கு இன்று முதல் 12,846 சிறப்பு பஸ்கள் இயக்கம்

தீபாவளி முடிந்து சென்னை திரும்புவோருக்கு இன்று முதல் 12,846 சிறப்பு பஸ்கள் இயக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மோகன் அறிக்கை:தீபாவளி முடிந்து, பிற ஊர்களில் இருந்து, சென்னை வரும் பயணியர் வசதிக்காக, இன்று முதல் 4ம் தேதி வரை, தினமும் செல்லும் 2,092 பஸ்களுடன் 3,165 சிறப்பு பஸ்கள், பிற முக்கிய ஊர்களில் இருந்து, 3,405 பஸ்கள் என, மொத்தம் 12,846 பஸ்கள் இயக்கப்படும்.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஏற்கனவே அறிவித்தபடி 28 முதல் 30ம் தேதி வரை, சென்னையில் இருந்து தினமும் செல்லும் 2,092 பஸ்களுடன், 4,508 சிறப்பு பஸ்கள் என, மொத்தம் 10,784 பஸ்கள் இயக்கப்பட்டன. இவற்றில் 5.76 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு தீபாவளிக்கு, அரசு பஸ்களில், 5.66 லட்சம் பேர், சென்னையில் இருந்து சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சாண்டில்யன்
நவ 02, 2024 14:24

புதிய வரைபடத்தில் ரயில்நிலைய முகப்பில் தாம்பரம் என தமிழ் இந்தி ஆங்கிலம் என மும்மொழிகளில் சிவப்பு நிற நியான் சைன் வைத்துள்ளார்கள் அதில் இந்தி ஆங்கில மொழிகளில் பிரகாசமாக ஒளிறும்போது தமிழ் பெயர் மட்டும் ஒளி குறைந்து மங்கலாக உள்ளதே ஏனோ அதை தென்னக ரயில்வே அதிகாரிகள் சரிசெய்ய சொல்ல வேண்டும் இரண்டாவதாக இந்த முனையம் ஆறு நடைமேடைகளை இணைத்து கட்டப் படுவதாக சொல்கிறார் தற்போது அங்கே பத்து நடை மேடைகள் உள்ளனவே இதென்ன குழப்பம் அதை விளக்க வேண்டும்


Ram pollachi
நவ 02, 2024 10:24

சென்னை எப்படி தூய்மையாக இருக்கலாம் இதோ நாங்கள் குடும்பத்துடன் வருகிறோம்...


முக்கிய வீடியோ