13 துவக்க பள்ளிகள் புதிதாக ஆரம்பிக்க உத்தரவு
சென்னை:தமிழக பட்ஜெட்டில் அறிவித்தபடி, 13 துவக்க பள்ளிகள் புதிதாக ஆரம்பிக்கவும், நான்கு துவக்க பள்ளிகளை நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தவும், தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் பாலியப்பட்டு; வேலுார் மாவட்டம் குப்சூர், சின்ன எட்டுப்பட்டி; கிருஷ்ணகிரி மாவட்டம் கடூர் மற்றும் கட்டூர்; திருப்பத்துார் மாவட்டம் உடையராஜபாளையம்; மதுரை மாவட்டம் செட்டிக்குளம். விருதுநகர் மாவட்டம் இளந்திரை கொண்டான் மற்றும் எம்.சொக்கலிங்கபுரம்; நாகப்பட்டினம் மாவட்டம் தேத்தாக்குடி; நாமக்கல் மாவட்டம் அவுரிக்காடு; காஞ்சிபுரம் மாவட்டம் காவூர்; திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி 31வது வார்டு பெரியார் நகர் ஆகிய இடங்களில், துவக்க பள்ளிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. அதேபோல, வேலுார் மாவட்டம் குண்டுராணி மற்றும் சின்ன அல்லாபுரம்; விழுப்புரம் மாவட்டம் கன்னிகாபுரம்; நாகப்பட்டினம் மாவட்டம் டாடா நகர் துவக்க பள்ளிகள், நடுநிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட உள்ளன. இதற்கான நிதி மற்றும் ஆசிரியர் பணி இடங்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.