உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முக அடையாள செயலியால் 14,128 பேர் சிக்கினர்

முக அடையாள செயலியால் 14,128 பேர் சிக்கினர்

சென்னை,:முக அடையாள செயலியான, எப்.ஆர்.எஸ்., மென்பொருள் வாயிலாக, நான்கு ஆண்டுகளில், 14,128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: முக அடையாள செயலியான, எப்.ஆர்.எஸ்., எனும் மென்பொருள், 'சிடாக் கொல்கட்டா' நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. இதை, 46,122 போலீசார் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி, தனி நபரின் புகைப்படத்தை, காவல் நிலைய கணினிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தரவுகளுடன் ஒப்பிட்டு, முக அடையாளத்தை காட்டுகிறது. குற்றவாளிகள், காணாமல் போனவர்கள், சந்தேக நபர்கள், குற்ற வழக்குகளில் தேடப்படும் நபர்கள், தலைமறைவு ரவுடிகள் உள்ளிட்டோர் விபரங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை எப்.ஆர்.எஸ்., செயலி வாயிலாக படம் பிடிக்கும் போது, அவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளனவா என்பதை காட்டிக் கொடுத்து விடும். அந்த வகையில், நான்கு ஆண்டுகளில், முந்தைய குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட, 14,128 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ