உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சவுக்கு சங்கர் மீது கோவையில் 15 வழக்குகள் பதிவு

சவுக்கு சங்கர் மீது கோவையில் 15 வழக்குகள் பதிவு

கோவை: சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, சவுக்கு சங்கர் மீது புதிதாக 15 வழக்குகளை கோவை சைபர் கிரைம் போலீஸார் பதிவு செய்தனர். பெண் போலீஸார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக கோவை, சென்னை உள்பட பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில், அனைத்து வழக்குகளில் இருந்தும் சவுக்கு சங்கர் ஜாமின் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்து விட்டார். இதனிடையே, தன் மீது பதிவு செய்யப்பட்ட 16 வழக்குகளையும் ஒரே இடத்திற்கு மாற்ற வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கை விசாரித்த கோர்ட், குறிப்பிட்ட ஒரு வழக்கு தவிர, மற்ற அனைத்து வழக்குகளையும் கோவை சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷனுக்கு மாற்றி, உத்தரவிட்டது. இந்த நிலையில், வெவ்வேறு ஸ்டேஷன்களில் பதியப்பட்ட வழக்குகள் மாற்றப்பட்டு, சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் புதிதாக 15 எப்.ஐ.ஆர்.,க்களை பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான விபரங்களை அளிக்கவும், விசாரணைக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்கவும், சவுக்கு சங்கர் மீது முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,க்கள் கோவைக்கு வந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

joseph
ஏப் 10, 2025 22:41

மிகவும் நெறி தவறிய செயல், ஒரு தனிமனிதனுக்கு எதிராக கிளம்பிய அரசியல் கட்சி . அவனுடைய குற்றம் நாவடக்கமின்மை.


RAMESH
ஏப் 10, 2025 19:21

நீட் பயத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்தி தற்கொலை செய்ய வைத்த நபர்களை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும்...அதை விட்டு சவுக்கு என்ற தனி மனிதரை பழி வாங்குதல் கூடாது


Velmani Murugan
ஏப் 10, 2025 13:24

Tn police departments are creating a crisis after a crisis on journalist savukku shankar. This is the worst way to attack savukku shankar to some police officials and ias officials. In future its the way to HR d mla or mp is soon as possible...


Narayanan
ஏப் 10, 2025 13:17

மதுரை நீதிமன்றம் சவுக்கு சங்கர் மீதுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடிசெய்ய வேண்டும் .


Oru Indiyan
ஏப் 10, 2025 10:27

யாரையும் கைது செய்ய தேவையில்லை


sankaranarayanan
ஏப் 10, 2025 09:55

சவுக்கு சங்கர் மீது கோவையில் 15 வழக்குகள் பதிவு அதற்கு முன்பு அவரது வீட்டில் 50-பேர்கள் கொண்ட கும்பல் சென்ற மாதம் மனித கழிவை வீசி எரிந்து பல பண்டங்களை உடைத்து தூள் தூளாக்கியதை விசாரியுங்கள் அவரும் மனிதர்தான் அவருக்கு நேர்ந்த கதி இந்த நீதிபதிகளுக்கு நேர்ந்திருந்தால் என்ன செயவர்கள் வாய்மூடிக் கொண்டும் மவுனமா காப்பார்கள்


P. SRINIVASAN
ஏப் 10, 2025 11:38

அந்த சம்பவம் நடந்தது தவறுதான்.. ஆனால் அந்த சம்பவம் நடந்ததுக்கு காரணமே சவுக்கு சங்கர் தான்.