உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டசபையின் கடைசி நாளான நேற்று 16 மசோதாக்கள்! நிறைவேற்றம்

சட்டசபையின் கடைசி நாளான நேற்று 16 மசோதாக்கள்! நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று, 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களில், கல்வி நிறுவனங்கள் அமைக்க அனுமதி தரும் மசோதா முக்கியமானது. கடந்த 14ம் தேதி துவங்கிய தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நேற்று நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று, துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு, நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்தார். அதை தொடர்ந்து, 16 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ூ

அறநிலையத்துறை நிலத்தில் கல்வி நிறுவனங்கள்:

தமிழ்நாடு ஹிந்து சமய மற்றும் அறக்கொடைகள் சட்டத்திருத்த மசோதாவை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தாக்கல் செய்தார். அதில், பல்வேறு சமய நிறுவனங்களுக்கு, சமய நோக்கங்களுக்காக வழங்கப்பட்ட அசையா சொத்துக்கள் பயன்பாடின்றி உள்ளன. அவற்றில் கல்வி நிறுவனங்களை நிறுவி பராமரிக்கவும், அர்ச்சகர்கள், இசை கலைஞர்கள், வேத பாராயணர்கள் ஆகியோருக்கான பயிற்சி பள்ளிகள் அமைக்கவும் வகை செய்யப்பட்டு உள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க., - 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி, ''கல்வி நிறுவனங்களை அமைப்பது அரசின் கடமை; கோவில் நிலங்களையும், நிதியையும் கோவில் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்,'' என்றார். இந்த மசோதா, குரல் ஓட்டெடுப்பு வாயிலாக நிறைவேற்றப்பட்டது.

தனியார் பல்கலைக்கு அனுமதி :

மாநகராட்சி பகுதிகளில் 25 ஏக்கர், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 30 ஏக்கர், மற்ற பகுதிகளில் 50 ஏக்கர் நிலம் இருந்தால், தனியார் பல்கலை அமைக்க வகை செய்யும் சட்ட மசோதாவுக்கு, அ.தி.மு.க., - அன்பழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - நாகை மாலி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த மசோதாவும் குரல் ஓட்டெடுப்பில் நிறைவேறியது.

கவர்னர் திருப்பி அனுப்பிய நிதி மசோதா மீண்டும் நிறைவேற்றம்:

கடந்த 2022 பிப்ரவரி 22ல், தமிழ்நாடு நிதி நிர்வாக பொறுப்புடைமை சட்டத்தில், அடுத்த நிதியாண்டுக்கு பொருந்தும் வகையில் நிதி ஒதுக்கீடு செய்ய, திருத்தம் செய்யப்பட்டது. அதற்கு ஒப்புதல் கேட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவை திருப்பி அனுப்பிய கவர்னர் ரவி, 'இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடப்பதால், அடுத்த நிதியாண்டுக்கும் நிதி ஒதுக்குவது சரியல்ல' என கடிதம் அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தை வாசித்த சபாநாயகர், ''அதில் உள்ள கருத்துகளை சட்டசபை நிராகரிக்கிறது,'' என்றார். அதை தொடர்ந்து, இந்த மசோதா மீண்டும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, ''18 மாதங்கள் நிலுவையில் வைத்திருந்த இந்த நிதி மசோதாவை, கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார். இது போன்ற மசோதாக்கள், 2010, 2015, 2020ம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டு உள்ளன,'' என்றார். மேலும், முன்னாள் எம்.எல்.ஏ., ஓய்வூதியம் உயர்வு, சிறு குற்றங்களுக்கு சிறை தண்டனைக்கு பதிலாக அபராதம் விதித்தல், கழிவு நீக்க செயல்பாடுகளுக்கான உரிமம் வழங்க ஊராட்சிகளுக்கு அதிகாரம் வழங்குதல், தமிழக பல்கலைகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., வாயிலாக நிரப் புதல் போன்ற மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், 28 மாவட்ட ஊராட்சிகளில் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டித்தல், அரசின் டெண்டர்களை தமிழக அரசின் இணையதளம் வாயிலாக மேற்கொள்ளுதல், தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலை சட்டம் உள்ளிட்ட 16 சட்ட மசோதாக்கள் நேற்று நிறைவேற்றப்பட்டன. சித்த மருத்துவ பல்கலை சட்டத்திற்கு, அ.தி.மு.க., - தளவாய்சுந்தரம் எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், நேற்று சட்டசபை கூட்டம் முடிந்ததும், கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

சந்திரசேகர்
அக் 18, 2025 13:44

, எப்போதும் இந்துக்களுக்கு எதிராகவும் இந்து கடவுள்களுக்கு எதிராகவும் ஏதாவது செய்வது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது. இந்துக்கள் சாதியில் பிரிந்து கிடப்பதால் அவர்கள் வேலை சுலபமாக முடிந்து விடுகின்றது. இன்று நாம் இன்று அடங்கி இருப்பதால் நம் சந்ததியினர் பின்பு கஷ்டப்பட போகின்றார்கள். ஏனென்றால் இங்கே மதம் மாற்றும் கும்பலுக்கு துணை போகும் அரசால் நாளை நாம் வாழும் இடத்திலும் வன்முறைகள் அரங்கேறும். இப்போது அவர்கள் வாழும் நாட்டில் நிம்மதி இல்லை. நாளை இங்கேயும் நடக்கலாம். அரசியல்வாதிகள் அவர்கள் விரும்பும் நாட்டுக்கு சென்று விடுவார்கள் அவர்கள் கொள்ளை அடித்த பணத்தோடு. சந்தியுங்கள் மக்களே. ஓட்டு உங்கள் கையில்


Balasubramanian
அக் 18, 2025 12:59

கோவில் இல்லை சாமி இல்லை என்று கூறும் அரசு அர்ச்சகர் பயிற்சி பள்ளி நடத்துவதேன்? அதற்கு அறநிலையத்துறை பணம்! யார் ஆளுநராக இருந்தாலும் இத்தகைய மசோதா கிடப்பில் போடப்படும்


Balaa
அக் 18, 2025 11:54

கோயில்களை கொள்ளை அடித்து சர்ச் பராமரிப்பதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். அந்த வேலை எப்படி நடைபெறுகின்றது என்று பகுத்தறிவு முதல்வர் சர்ச்சுக்கு சென்று பார்ப்பார். வெளிநாட்டு பணத்தை மதம் மாற்றுவதற்கு மட்டும் பயன்படுத்துவார்கள். இதற்குத்தான் நம் முப்பாட்டன்கள் கோவில்களுக்கு தானம் கொடுத்தார்கள்.


rasaa
அக் 18, 2025 10:58

இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்பதுதான் இந்த அரசின் இலக்கு.


பாரதி
அக் 18, 2025 10:20

அமச்சர்களின் வீட்டு இடங்களில் பாதியில் ஏழைகளுக்கு கல்விச் சாலைகளை கட்டலாமே...


சாமானியன்
அக் 18, 2025 08:09

அர்ச்சகர்கள் சம்பளத்தை உயர்த்துதல், தீபாவளிக்கு ஊக்கத் தொகை தரலாமே . திமுக கொள்ளையை யாதாவது வழியில் தடுத்து நிறுத்த வேண்டும். சீக்கிரமாக திமுக எம்.எல்.ஏக்களுக்கு கடுமையான தண்டனை தரவேண்டும்.


D Natarajan
அக் 18, 2025 08:04

கோவில் நிலங்களை பட்டா போட்டு விற்க முயற்சி நடக்கிறது யார் கேட்பது. கேடுகெட்ட திராவிட ஆட்சி.


R.MURALIKRISHNAN
அக் 18, 2025 07:26

தமிழ்நாட்டை விட்டு அகற்றப்பட வேண்டிய அரசு திருட்டு திராவிடம். ஒழிப்போம் நயவஞ்சக கயவர்களை வரும் தேர்தலில் காப்போம் தமிழ் மண்ணின் பாரம்பர்யத்தை.


Kasimani Baskaran
அக் 18, 2025 06:01

அறநிலையத்துறை கல்விக்கு பொறுப்பு வகிக்கவில்லை. பல்லாயிரம் கோவில்கள் சிதிலமடைந்து இருக்கும் பொழுது அறநிலையத்துறை நிதியை கல்விக்கூடங்கள் கட்ட உபயோகிப்பது தவறு. கோவில்களை பராமரிப்பதுதான் அறநிலையத்துறையில் பிரதான பணி .


Gajageswari
அக் 18, 2025 05:37

மசோதாக்கள் மக்கள் கருத்து கேட்பது நடத்தி, அந்த கருத்துகளை ஆராய்ந்து, அதன் பின்பே சட்டமாக நிறைவேற்ற வேண்டும் என்ற நடைமுறை அரசியல் சாசனம் திருத்தம் மூலம் உறுதி செய்ய வேண்டும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை