உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்; திண்டுக்கல் இளைஞர் கைது

ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சா பறிமுதல்; திண்டுக்கல் இளைஞர் கைது

மயிலாடுதுறை: ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் திண்டுக்கல் இளைஞரை கைது செய்தனர்.ரயிலில் கஞ்சா கடத்தலை கட்டுப்படுத்த ரயில்வே எஸ்பி. ராஜன் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை, சிதம்பரம் ரயில்வே போலீசார் மற்றும் தனி பிரிவு போலீஸ் பதி ஆகியோர் இணைந்து நேற்று மாலை தெலுங்கானா மாநிலம் கச்சிக்குடாவில் இருந்து மதுரை நோக்கி சென்ற வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை நடத்தினர். அப்போது எஸ்.1 கோச்சில் இருக்கைக்குக் கீழ், சந்தேகப்படும் வகையில் கிடந்த ட்ராவல் பேக் ஒன்றை போலீசார் எடுத்து சோதனை நடத்தினர். அதில் 2 பொட்டலங்களில் 16 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு அமர்ந்திருந்த திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த முசுவனத்தூர் பகுதியை சேர்ந்த முத்துச்செல்வம்.33. என்பவரிடம் நடத்திய விசாரணையில் தெலுங்கானா மாநிலத்தில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்தது. மேலும் அவர் செய்தியாளர் அடையாள அட்டை வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து பல லட்சம் மதிப்புடைய கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் முத்துச்செல்வனை கைது செய்து நாகப்பட்டினம் போதைப்பொருள் நுண்ணறிவு குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதனை அடுத்து முத்துச்செல்வனிடம் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Ramesh Sargam
மார் 26, 2025 13:09

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா இப்பொழுது எங்கே?


Nethiadi
மார் 26, 2025 10:00

அது என்ன இளைஞர் அவன் எந்த மதம்னு போடுங்க


முக்கிய வீடியோ