உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விவசாயி வீட்டில் புகுந்து 160 சவரன் நகை திருட்டு

விவசாயி வீட்டில் புகுந்து 160 சவரன் நகை திருட்டு

புதுக்கோட்டை: விவசாயி வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த, 160 சவரன் நகைகள், 3 லட்சம் ரூபாயை திருடிச்சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம், ராங்கியத்தை சேர்ந்த விவசாயி முருகேசன், 56. இவர், புதுக்கோட்டை, பாசில் நகரில் சொந்தமாக வீடு கட்டி, குடும்பத்துடன் வசிக்கிறார். இவரின் இரு மகன்களுக்கும் திருமணமாகி வெளியூரில் வசிக்கின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=812qe4wd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று முன்தினம் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, வீட்டை பூட்டிவிட்டு, முருகேசன் சொந்த ஊர் சென்றார். நேற்று மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது, பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 1.25 கோடி ரூபாய் மதிப்புள்ள, 160 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய், வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தன. கொள்ளையர்கள் வீட்டின் உள்ளே மிளகாய் பொடியையும் துாவிவிட்டு சென்றுள்ளனர். திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 05, 2025 22:24

அதென்ன விவசாயி வீட்டில் கொள்ளை.....தொழிலை வைத்து தான் கொள்ளை நடந்த செய்தியை போட முடியுமா ??? மதத்தால் பிரித்தனர், சாதியால் பிரித்தனர், மொழியால் பிரித்தனர், இடத்தால் வடக்கு தெற்கு என்று பிரித்தனர் இப்பொழுது செய்யும் தொழிலை வைத்து பிரிக்கின்றனர்..... இன்னும் பிரிக்க என்ன இருக்கிறது????


Saraswathy Giri
ஆக 05, 2025 20:32

பணக்காரவிவசாயிபோல்இருக்கிறதுஎஎந்தவிவசாயிவீட்டில்நகைவைத்திருக்கிறார்கள்


Gajageswari
ஆக 05, 2025 17:06

₹2000 ஆக போலி விவசாய்கள்


Narayanan
ஆக 05, 2025 16:04

தங்க நகை விற்பனையாளர்கள் இவ்வாறு விலை ஏற்றிக்கொண்டு போனால் விற்பனையாளர்கள் , பயனாளர்கள் இடத்தில் கொள்ளைதான் போகும் .


கூத்தாடி வாக்கியம்
ஆக 05, 2025 11:49

விவசாயி வளர்ந்து விட்டார்கள். இப்போ அரசு சிந்திக்கும்.


Apposthalan samlin
ஆக 05, 2025 10:53

விவசாயி வீட்டில் இதன்னை பவுனா உதைக்குதே


VENKATESAN
ஆக 05, 2025 09:47

வந்தவன் இது விவசாயியின் வீடு என தெரியாமல் திருடியிருப்பான்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 05, 2025 07:42

விவசாயி வீட்டில் புகுந்து 160 சவரன் நகையை முறைகேடாக எடுத்து சென்று தன் வீட்டில் பாதுகாப்பாக வைத்த தொண்டனை ..மதவாதம் தமிழ்நாட்டில் பரவாமல் தடுத்த தியாகியை ஒன்றும் செய்யாதீர்கள் ...அவர் நகையை திருடவில்லை .. தன் வீட்டில் வைத்து பொதுநலத்துடன் பத்திரமாக பாதுகாக்கிறார் ...


புதிய வீடியோ