உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 6 மாதத்தில் ரேபிஸ் நோய்க்கு 18 பேர் பலி விலங்குகள் கடித்தால் அலட்சியம் வேண்டாம்

6 மாதத்தில் ரேபிஸ் நோய்க்கு 18 பேர் பலி விலங்குகள் கடித்தால் அலட்சியம் வேண்டாம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களில், 'ரேபிஸ்' என்ற வெறிநாய்க்கடி நோய் பாதிப்பு ஏற்பட்டு, 18 பேர் இறந்துள்ளனர். நாய்க்கடிக்கு சிகிச்சை பெறுவது போல், மற்ற விலங்குகள் கடித்தாலும், உரிய சிகிச்சை பெற வேண்டும்' என, சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

தடுப்பூசி

தெருநாய்கள், வளர்ப்புப் பிராணிகள் கடித்து மனிதர்கள் காயமடையும் சம்பவங்கள், தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பொதுவாக 'ரேபிஸ்' தொற்றில் இருந்து, செல்லப்பிராணிகளையும், மனிதர்களையும் காப்பதற்கு, ஒரே வழியாக தடுப்பூசி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8wwud1av&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நாய்களை பொறுத்தவரை, பிறந்த முதல் ஆண்டில் இருமுறை, 'ரேபிஸ்' தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அதைத் தொடர்ந்து, ஆண்டுதோறும் ஒருமுறை தடுப்பூசி போட வேண்டியது அவசியம். ஆனால், சில தெருநாய்களுக்கும், செல்லப்பிராணிகளுக்கும், தடுப்பூசி முறையாக செலுத்தப்படுவதில்லை. இதனால், மனிதர்களை நாய்கள் கடிக்கும்போது, 'ரேபிஸ்' தொற்று பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில், கடந்த ஆண்டில் மட்டும், நாய்க்கடியால் 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில், 40 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர். இந்த ஆண்டில் ஆறு மாதங்களில், 2.80 லட்சம் பேர் வரை, நாய்க்கடி பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக, சேலம், செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருச்சி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 10,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேலத்தில் மட்டும், 20,000 பேர் வரை, நாய்க்கடி பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். திருவண்ணாமலையில், 3, மதுரை, கன்னியாகுமரி, சிவகங்கையில் தலா இருவர் என, மாநிலம் முழுதும் 18 பேர் ரேபிஸ் நோயால் இறந்து உள்ளனர்.

முறையான சிகிச்சை

நாய்க்கடிக்கு உள்ளானவர்களில், சிலர் உரிய நேரத்தில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல், காலதாமதமாக சிகிச்சை பெற்றதால், உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய்க்கடியால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டாலும், அனைவரும் ரேபிஸ் நோயால் உயிரிழப்பது இல்லை. மேலும், நாய் கடித்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும் என்பது இல்லை.ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, நரி, கீரி, ஓநாய், வவ்வால் போன்றவை கடித்தாலும் பாதிப்பு ஏற்படும். எனவே, எவ்வகை விலங்கு கடித்தாலும், முறையாக சிகிச்சை பெற வேண்டும்.அப்போது தான், ரேபிஸ் நோயால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க முடியும். இதற்கான சிகிச்சை முறைகள், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், தயார் நிலையில் உள்ளது. தடுப்பு மருந்துகளும் போதியளவில் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.ஆறு மாதங்களில் நாய்க்கடி பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள்:மாவட்டம் - பாதிப்புசேலம் - 19,250செங்கல்பட்டு - 13,064தஞ்சாவூர் - 11,441திருச்சி - 11,371கன்னியாகுமரி - 10,580பாதிப்பு குறைவான மாவட்டங்கள்:கோவை - 8,690மதுரை - 6,633சென்னை - 5,970நாகப்பட்டினம் - 2,360மயிலாடுதுறை - 2,197


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Sri
ஜூன் 26, 2025 16:35

Govt must pass law to regularise pet animals at home. Make vaccination for pets mandatory and tag the report with pet license. Anyone with pet and not giving vaccine must get license cancelled


V RAMASWAMY
ஜூன் 26, 2025 13:19

கொடிய விலங்குகள் முக்கியமா, மனித உயிர்கள் முக்கியமா? அரசு உறுதியாக செயல்பட்டு, தக்க மாற்று சட்ட திட்டங்கள் தீட்டி, தெரு விலங்குகளை அதற்கென ஒரு காப்பகம் உருவாக்கி கருத்தடை செய்து மக்களை காப்பாற்றவேண்டும்.


Ramesh Sargam
ஜூன் 26, 2025 12:29

தமிழக மக்கள் எப்படியெல்லாம் வேதனை அனுபவிக்கிறார்கள். ஒரு பக்கம் அலட்சியமாக திரியும் நாய்களால் பிரச்சினை. மறுபக்கம் அலட்சியமாக திரியும் காமுகர்களால் பாலியல் தொல்லை.


Keshavan.J
ஜூன் 26, 2025 10:33

மக்கள் இதில் இருந்தும் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்.


Svs Yaadum oore
ஜூன் 26, 2025 09:42

மக்களே ஜாக்கிரதை .... மிகுந்த கவனம் தேவை .....இந்த ரேபிஸ் இப்பொது சென்னையில் வேகம் எடுத்துள்ளது ....நாய்கள் பெருக்கம் ..நாய்கள் பெருக்கம் கட்டுப்படுத்த ஒதுக்கப்பட்ட தொகை மொத்தமும் விடியல் ஆட்சியில் பகல் கொள்ளை ...சென்னையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரேபிஸ் தடுப்பூசி இல்லை ....வேறு மருத்துவமனை செல்வதற்குள் தாமதம் நோய் பரவல் ... உயிர் போகலாம் ....ஆனால் ரேபிஸ் நோய் பாதிப்பில் உயிர் போவது மகா கொடுமை ....


ஜெகதீசன்
ஜூன் 26, 2025 09:18

அரசாங்கம் எதுக்கு இருக்கு? கோர்ட் எதுக்கு இருக்கு? மக்கள் சாகறத வேடிக்கை பார்க்கவா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை