உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பு; முக்கிய குற்றவாளி 28 ஆண்டுக்கு பிறகு கைது

1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டு வெடிப்பு; முக்கிய குற்றவாளி 28 ஆண்டுக்கு பிறகு கைது

கோவை: கோவையில் 1998ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 10) கர்நாடகாவில் கைது செய்யப்பட்டார்.கோவையில், 1998ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்கு வந்திருந்த பா.ஜ., மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ஆர்.எஸ்.புரம் டி.பி.,ரோடு சந்திப்பில் பேச இருந்த மேடைக்கு அருகே குண்டு வெடித்தது. தொடர்ந்து, கோவையில், 14 இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=y321o9nd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, 58 பேர் கொல்லப்பட்டனர்; 250 பேர் படுகாயம் அடைந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நாட்டை உலுக்கிய இச்சம்பவத்தை விசாரிக்கும் வழக்கு, கோவை மாநகர போலீசிடம் இருந்து, சிறப்பு புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டது.விசாரணைக்கு பின், தடை செய்யப்பட்ட அல் உம்மா இயக்க நிறுவனர் பாஷா உட்பட, 166 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தொடர்புடைய பலரும் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் தண்டிக்கப்பட்டனர். இன்னும் சிலர் சிறையில் உள்ளனர். எனினும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய இருவர் மட்டும் போலீசில் சிக்காமல் தலைமறைவாகி விட்டனர்.இந்நிலையில், இன்று (ஜூலை 10) முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான டெய்லர் ராஜா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த 1996ம் ஆண்டு கோவையில், பெட்ரோல் குண்டு வீசியதில் ஜெயிலர் பூபாலன் உயிரிழந்த வழக்கிலும், நாகூரில் சயீதா கொலை வழக்கிலும், 1997ம் ஆண்டு மதுரையில் சிறை அதிகாரி ஜெயபிரகாஷ் கொலை வழக்கிலும் இவர் முக்கிய குற்றவாளி ஆவார்.இன்று டைலர் ராஜாவை போலீசார் கோவை அழைத்து வருகின்றனர். இதையொட்டி கோவை மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

பா மாதவன்
ஜூலை 11, 2025 06:32

எங்கே அந்த நடிகர் சீமானை காண வில்லை. சிறையில் இருக்கும் இஸ்லாமியர்கள் எல்லாம் விடுவிக்கப் படவேண்டும் என வாக்குகளுக்காக மத உணர்வை தூண்டிய நடிகன் சீமான், கோவை குண்டு வெடிப்புகளுக்கு காரணமான இஸ்லாமியர்களும் விடுவிக்கப் பட வேண்டும் என்று விரும்பும் இந்த நடிகன் முக்கிய குற்றவாளி பாக்ஷா மரண ஊர்வலத்தில் கலந்து கொண்டு, விடுதலைபோராட்ட தியாகி ஊர்வலத்தில் கலந்து கொண்டது போல போஸ் கொடுத்த, பேட்டி கொடுத்த கேவலமான மனிதன். இது போன்ற கேடு கெட்ட மனிதனை, நடிகனை தமிழகம் ஊக்கப் படுத்த கூடாது.


c.mohanraj raj
ஜூலை 10, 2025 18:39

அவர்களைக் கூட்டணியில் வைத்துள்ள கட்சி எப்படி கைது செய்வார் இதே பெரிய விஷயம் தான் .ஜெயிலில் வைத்து பிரியாணி கொடுங்கள் .நீதியரசர்கள் விடுதலை செய்து விடுவார்கள்


RAMESH
ஜூலை 10, 2025 16:11

பன்றி தின்னும் பயலுக்கு வழுக்கி விழுந்தான்....இறந்து போனான் என்ற செய்தி வரட்டும்....தீவிரவாதி பன்றி


என்றும் இந்தியன்
ஜூலை 10, 2025 16:10

தவறு கண்டேன் கைது செய்தேன் விசாரணை நடத்தினேன் சுட்டுட்டுத்தள்ளினேன் இந்த செயல் செய்யுங்கள் நாடு நல் வழியில் பயணிக்கும்


sasidharan
ஜூலை 10, 2025 14:49

தயவு செய்து அவனை என்கவுண்டர் செய்து விடுங்கள் . அப்போதுதான் இறந்தவர்கள் ஆத்மா சாந்தி அடையும். இத்தனை ஆண்டுகள் அவனை உயிரோடு விட்டதே மிக பெரிய தவறு.


Kumar Kumzi
ஜூலை 10, 2025 14:45

இந்த மூர்க்க பயங்கவாதியின் முழு பெயரை ஏன் பிரசுரிக்க தயங்குகிறீர்கள் இவனை என்கவுண்டரில் போட்டுத்தள்ளுங்கள்


shakti
ஜூலை 10, 2025 14:12

அவர் இவர்னு மரியாதையை நெம்ப ஜாஸ்தியா இருக்கு ???


பேசும் தமிழன்
ஜூலை 10, 2025 12:43

இவ்வளவு நாளும் தீவிரவாதியை பிடிக்காமல்.... தமிழக காவல்துறை மானத்தை வாங்குனீங்க.... இனியாவது சுட்டுக் கொல்லாமல் பிரியாணி விருந்து வைக்காதீர்கள்.


ஆரூர் ரங்
ஜூலை 10, 2025 11:39

படுகொலை செய்யப்பட்ட 58 பேரில் எத்தனை அப்பாவி முஸ்லிம்கள் என்பதை வெளியிடுங்கள். ஏனெனில் ஏற்கனவே சிக்கியவர்களது குடும்பங்களுக்கு உதவ இஸ்லாமிய இயக்கங்களால் இங்கும் வெளிநாடுகளிலும் நிதி திரட்டப்பட்டது. வீடு கட்டித் தந்ததும் வெளியானது. இதெல்லாம் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் செயல்களே.


xyzabc
ஜூலை 10, 2025 11:35

மாடல் அரசின் சாதனையா? ஸ்டிக்கரா ??


சமீபத்திய செய்தி