உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்துக்கு 2 அம்ரித் பாரத் ரயில்கள் 

தமிழகத்துக்கு 2 அம்ரித் பாரத் ரயில்கள் 

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்: தமிழகத்தில் இரண்டு 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கப்பட உள்ளன.'வந்தே பாரத்' ரயில்களுக்கு இணையாக, ஏ.சி., இல்லாத முன்பதிவு பெட்டிகள் மற்றும் பொதுப்பெட்டிகளுடன் கூடிய 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கம் கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. நடப்பாண்டு இறுதிக்குள் நாடு முழுதும், 26 'அம்ரித் பாரத்' ரயில்கள் இயக்கத்துக்கு கொண்டு வரப்பட உள்ளன. திருநெல்வேலி - ஷாலிமர், தாம்பரம் - சந்திரகாசி என இரு வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயங்க உள்ளன.திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும் ரயிலால், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரம் ஆகிய நகரங்களுக்கும் இந்த ரயில் சேவை கிடைக்க பெறும். சென்னையில் இருந்து வடமாநிலங்கள் பயணிப்போருக்கு சந்திரகாசி ரயில் பயனுள்ளதாக இருக்கும்.

என்னென்ன வசதி?

அம்ரித் பாரத் ரயில்கள், 12 முன்பதிவு, எட்டு முன்பதிவில்லா பொது பெட்டி, மாற்றுத்திறனாளிகள் பெட்டி உட்பட, 22 பெட்டிகளை கொண்டதாக இருக்கும். அனைத்து பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமரா, விசாலமான இருக்கை வசதி, அடுத்து வரும் ரயில் நிலையத்தை அறிவிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. 'ஜீரோ டிஸ்சார்ஜ்' மாடுலர் கழிப்பறை, அதிநவீன வசதி கொண்ட இணைப்பு மற்றும் ரயில் பெட்டிகள் என்பதால், ரயில் இயக்கம் மென்மையாக உணரப்படும். 'புஷ்-புல்' தொழில்நுட்பம் என்பதால், இருபுற இன்ஜின்கள் மூலம் ரயில், 130 கி.மீ., வேகத்தில் இயங்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

R K Raman
அக் 24, 2024 02:55

தஞ்சாவூர் செய்த பாபம் என்னவோ? இரட்டை பாதை இல்லை. சரியான ரயில் வசதிகள் இல்லை.


Ananth Tamilan
அக் 23, 2024 06:26

கேரளா எம் பி க்கள் எப்போதும் ஒற்றுமையாக சென்று தங்கள் மாநிலத்துக்கு தேவையான ரயில்களைப் பெறுவர்... அதனால் தான் கேரளாவிற்கு பல ரயில்கள் உண்டு...நீங்கள் நம்மூர் எம் பி க்களை தான் கேட்க வேண்டும்....


kulandai kannan
அக் 22, 2024 13:58

ரயில்வே துறை முதலில் கவனிக்க வேண்டியவை, punctuality, ticketless travel and cleanliness. Everything else can wait.


venugopal s
அக் 22, 2024 12:23

தமிழகத்துக்கு பிரதமர் மோடி தீபாவளி பரிசாக வழங்கியுள்ளார் என்று உருட்ட ஒருவரும் வரவில்லையே! சுண்டைக்காய் அளவு மாநிலமான கேரளாவுக்கு ஆறு ரயில்கள் என்ற உண்மையை எழுத மறந்தது ஏனோ?


Parthasarathy Badrinarayanan
அக் 23, 2024 05:28

மக்கள் அளவுக்கு தமிழன் பயணிப்பதில்லை. கும்மிடிப்பூண்டி கூட தாண்ட வகைகளுக்கும் வக்காலத்து வாங்கும் அறிவாளிகள் அதிகமான தமிழகம்


raja
அக் 22, 2024 04:59

ஓகே கூட்டணி உறுதி ஆயிடிச்சு... இனி எடாபாடியார் இந்த அரசை விடியா அடிமை அரசு என்று அழைக்கலாம்...


வைகுண்டேஸ்வரன்
அக் 22, 2024 10:35

இந்த செய்திக்கும் நீ எழுதியிருப்பதற்கும் என்ன..


புதிய வீடியோ