உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்செந்துார் கடலில் கிடந்த 2 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

திருச்செந்துார் கடலில் கிடந்த 2 கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரை பகுதியில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கமான நிகழ்வாக மாறி விட்டது. சமீபத்தில் கடல் உள்வாங்கிய போது, 4 அடி உயரம் கொண்ட பெரிய கல்வெட்டு ஒன்றை அப்பகுதியில் நீராடிய பக்தர்கள் கண்டுபிடித்தனர். மற்றொரு பகுதியில், 4 அடி உயரம் கொண்ட தமிழ் எழுத்துக்கள் அடங்கிய கல் துாண் ஒன்றையும் பக்தர்கள் கண்டுபிடித்தனர். அந்த கல்வெட்டுகள் கடலில் நீண்ட நாட்களாக கிடந்ததால் அதில் உள்ள எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை.அந்த கல்வெட்டுகளை, திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவரான பேராசிரியர் சுதாகர் மற்றும் பேராசிரியர் மதிவாணன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். கடல் பாறை மேல் கிடந்த கல்வெட்டை படி எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Geethanjali Nil
டிச 03, 2024 10:44

அதெல்லாம் ஒகே. பட் ஆவணங்கள் மாத்தி எழுதி நூலகத்தில் adukkuraanunga...


Bhaskaran
டிச 03, 2024 09:30

பத்திரமாக வைக்கனும் தொல் பொருட்களை ஆட்டை போட ஒரு கும்பல் தயாராக இருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை