உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆலமரம் முறிந்து விழுந்து பெண்கள் 2 பேர் உயிரிழப்பு

ஆலமரம் முறிந்து விழுந்து பெண்கள் 2 பேர் உயிரிழப்பு

திருவண்ணாமலை: செய்யாறு அருகே ஆலமரம் முறிந்து விழுந்து பெண்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே, கழனிப்பாக்கத்தில் நிழலுக்காக அமர்ந்தவர்கள் மீது ஆலமரக்கிளை முறிந்து விழுந்தது. இந்த விபத்தில் அன்னபூரணி (60), வேண்டா (55) ஆகிய இரு பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=eek65j76&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
மே 12, 2025 15:01

நிகழ்வுகளுக்கு எல்லாம் கால நிர்ணயம் கிடையாது, விதியை மதியால் வெல்லமுடியாது. மதியும் வீதியில் உட்பட்டது. தமிழ்நாடு அரசை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த ஆட்சி எப்போது அகலும் என்பதனை கூறமுடியாது. 2 பெண்கள் உயிர் இழப்பு என்பது விதிக்கு உட்பட்டது. ஆண்டவனை வேண்டலாம் இது மாதிரி நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்று. தற்போதைய தமிழ்நாடு அரசு கூறாது ஆண்டவனிடம். .


சமீபத்திய செய்தி