உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுற்றுச்சுவர் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி

சுற்றுச்சுவர் சரிந்து 2 தொழிலாளர்கள் பலி

அவிநாசி:அவிநாசி அருகே கோழிப்பண்ணைக்கு சுற்றுச்சுவர் கட்டிய போது, ஹாலோ பிளாக் கற்கள் சரிந்து விழுந்து இரு தொழிலாளர்கள் இறந்தனர். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே கருவலுார், உப்பிலிபாளையம் கிராமத்தில், சண்முகம் என்பவரின் தோட்டத்தில், சில நாட்களாக கோழிப்பண்ணை அமைக்க கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இதில், நிலக்கோட்டை, கொடைரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ், 46, சுண்டக்காம்பாளையத்தை சேர்ந்த அந்தோணி, 55, கருவலுாரை சேர்ந்த சுந்தரம், 42, கடலுாரை சேர்ந்த முத்தாள், 40, ஆகிய நான்கு பேர் வேலை செய்தனர். அதில், 15 அடி உயரத்திற்கு ஹாலோ பிளாக் கற்கள் கொண்டு இருபுறமும் சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. நேற்று அந்த கற்கள் மீது சிமென்ட் கலவை பூசுவதற்காக சாரம் கட்டும் பணி நடைபெற்றது. அப்போது திடீரென ஹாலோ பிளாக் கற்கள், அடியோடு சரிந்து சாரம் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் மீது விழுந்ததில், ரமேஷ், அந்தோணி இடிபாடுகளில் சிக்கி இறந்தனர். சுந்தரம், முத்தாள் படுகாயமடைந்தனர். இதுகுறித்து அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை