உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1967, 1977 தேர்தல்களை போலவே 2026 அமையும்

1967, 1977 தேர்தல்களை போலவே 2026 அமையும்

சென்னை: ''கடந்த 1967 மற்றும் 1977ம் ஆண்டு நடந்த தேர்தல்களில், அதிகார பலம் கொண்ட கட்சிகளை எதிர்த்து, புதிதாக வந்தவர்கள் வெற்றி பெற்றது போல, 2026ம் ஆண்டு தேர்தலிலும் நடக்கும்,'' என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பேசினார். தமிழக வெற்றிக் கழகத்தில் ௨ கோடி உறுப்பினர்களை சேர்ப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கென உறுப்பினர் சேர்க்கைக்கு, மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த செயலியை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி, சென்னை பனையூரில் உள்ள த.வெ.க., தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் செயலியை அறிமுகம் செய்து வைத்து, ஐந்து குடும்பங்களை உறுப்பினர்களாக இணைத்து வைத்த பின், அக்கட்சித் தலைவர் விஜய் பேசியதாவது: இதற்கு முன், தமிழக அரசியலில் இரண்டு மிகப்பெரிய தேர்தல்கள், 1967 மற்றும் 1977ம் ஆண்டுகளில் நடந்தன. அதை போலவே, 2026 தேர்தல் அமையப்போகிறது. அதிகார பலம், அசுர பலம் கொண்ட கட்சிகளை எதிர்த்து, அந்த தேர்தல்களில் புதிதாக வந்தவர்கள் வெற்றி பெற்றனர். ஊருக்கு ஊர், வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு என எல்லா மக்களையும் அவர்கள் சந்தித்ததால் வெற்றி பெற்றனர். 'மக்களிடம் செல்; மக்களிடம் இருந்து கற்றுக்கொள்; மக்களுடன் வாழ்; மக்களுடன் சேர்ந்து திட்டமிடு' என அண்ணாதுரை கூறியுள்ளார். இதை சரியாகச் செய்தால், நம்மால் வெற்றி பெற முடியும். அடுத்து மதுரை மாநாடு, மக்கள் சந்திப்பு பயணம் நடக்கவுள்ளது. தொடர்ந்து, மக்களுடன் மக்களாக இருக்கப் போகிறோம். இப்போதிருந்தே அதற்கான வேலையை துவங்க வேண்டும். நாம் இருக்கிறோம்; நம்முடன் மக்கள் இருக்கின்றனர்; இதற்கு மேல் என்ன வேண்டும்? இவ்வாறு விஜய் பேசினார். த.வெ.க., உறுப்பினர் சேர்க்கைக்கான மொபைல் போன் செயலியை அறிமுகப்படுத்திய விஜய்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

vbs manian
ஜூலை 31, 2025 11:03

பிரமாதமான கனவு.


Muralidharan raghavan
ஜூலை 31, 2025 09:56

2026 வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. விஜய் ஓட்டை பிரிப்பார். அதனால் யாருக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காது. விஜய் கிறிஸ்தவராக இருந்தாலும் கூட கிறிஸ்தவர்கள் அவருக்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகம். அவர்கள் திமுகவுக்குத்தான் வாக்களிப்பார்கள். ஏனெனில் ஓட்டுகள் பிரிந்து அது பாஜ கூட்டணிக்கு உதவியது போலாகும்


c.k.sundar rao
ஜூலை 31, 2025 09:30

Joseph Vijay is not MGR, JV should understand that MGR was in politics while acting in movies and also read the pulse of the people but in JV case he has neither have politician brain nor direct access to people problem and reacts to sitting in palatial house and not meeting people.


Natarajan Mahalingam
ஜூலை 31, 2025 06:58

வாய்ப்பில்லை ராசா


நிக்கோல்தாம்சன்
ஜூலை 31, 2025 06:20

அடுத்த துண்டு சீட்டு ரெடி