உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் தொல்லை செய்ததாக 21 மாணவியர் புகார் : ஊட்டி அரசு பள்ளி ஆசிரியர் கைது

பாலியல் தொல்லை செய்ததாக 21 மாணவியர் புகார் : ஊட்டி அரசு பள்ளி ஆசிரியர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஊட்டி: மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஹோப் பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் , 50. இவர் அறிவியல் ஆசிரியராக பல்வேறு அரசு பள்ளிகளில் பணியாற்றி உள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியில் சேர்ந்தார். அந்த அரசு பள்ளிக்கு பாலியல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீசார் சென்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wxfrnl4z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, குட் டச், பேட் டச் குறித்து மாணவ- மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. பயிற்சி வகுப்பு முடிந்ததும் பள்ளியில் இருந்த 6ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், உடலில் தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார். பள்ளியில் படித்த 21 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த செந்தில்குமார் மீது புகார் அளித்தனர். அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். ஊட்டி ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து செந்தில்குமரை நேற்றிரவு கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

D Natarajan
ஜூலை 04, 2025 11:50

உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். அனால் விடியல் அரசு பதவி உயர்வு கொடுக்கும். இது தமிழக அரசு இல்லை. விடியல் , திராவிட மாடெல் அரசு. முட்டாள்களின் கூடம்


Nagarajan D
ஜூலை 04, 2025 10:28

இதை போன்ற குற்றவாளிகளுக்கு விசாரணையே இல்லாமல் தூக்கு தான் சரியான தண்டனை


மூர்க்கன்
ஜூலை 04, 2025 11:28

ஏன் அவசரம் ?? விசாரித்து தூக்கில் தொங்க விடுங்கள்?? நிதானம் அவசியம்.


Nagarajan D
ஜூலை 04, 2025 14:58

நம்ம விசாரணை eppadi இருக்கும் இவனுங்க அதை எப்படி கிழிப்பானுங்க என்று தெரியாதா...


Kanns
ஜூலை 04, 2025 08:45

Vested False Case by CaseHungryCriminals Due to Vested Groupism


raja
ஜூலை 04, 2025 08:26

இது தாண்டா திராவிட மாடல் ஆட்சி என்று செருக்குடன் கூரிய முதல்வர் உத்துவேல் கருணாநிதி ஸ்டாளின் ஆட்சியில் அண்ணா பல்கலை முதல் பள்ளிகள் வரை "சார்" களுக்கு பஞ்சம் இல்லை...பெருமை பட வேண்டிய விசயம்


மூர்க்கன்
ஜூலை 04, 2025 11:30

எந்த சாரையும் விடாமல் கடுமையான தண்டனை கொடுத்ததுதான் திராவிட மாடல் ஆட்சி?? வழக்கையே வாபஸ் வாங்க வைத்து பதவியில் வைத்து அழகு பார்த்த ஆட்சி யாருடையது என்பதை அகிலமே அறியும் அதற்கு பிரிஜ் பூசன் சாட்சி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை