உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தெரு நாய்க்கடியால் 3.80 லட்சம் பேர் பாதிப்பு: ரேபிஸ் நோய்க்கு 22 பேர் பலி

தெரு நாய்க்கடியால் 3.80 லட்சம் பேர் பாதிப்பு: ரேபிஸ் நோய்க்கு 22 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த 8 மாதங்களில் ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். 3.60 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தெருநாய்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளாட்சி அமைப்புகள் திணறி வருகின்றன. இதனால், ஒவ்வொரு தெருவிலும் 8 முதல் 10 நாய்கள் சுற்றி வருகின்றன. அவை, சாலையில் நடந்து செல்வோர், இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி துரத்தி கடிக்கின்றன. தவிர, சாலையின் குறுக்கே ஓடும் நாய்களால் விபத்துகளும் அடிக்கடி நிகழ்கின்றன. சென்னையில் மட்டும் தினமும், 10க்கும் மேற்பட்டோர் தெருநாய் மற்றும் வளர்ப்பு நாய் கடியால் பாதிக்கப்படுகின்றனர். சென்னையில் மட்டும் 9 ஆயிரம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்ட ஆட்டோ டிரைவர் ஒருவர் உயிரிழந்துள்ளது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், தமிழக பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த 8 மாதங்களில் ரேபிஸ் நோயால் 22 பேர் உயிரிழந்துள்ளனர். நாய்க்கடி தடுப்பதற்கு நாய் இனப்பெருக்கத்தை குறைக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 3.80 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், பொது மருத்துவமனைகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Svs Yaadum oore
செப் 15, 2025 21:51

நாய் பிடிப்பதை தெருநாய் ஆர்வலர், எவனாவது தடுத்தால் விடியல் போலீஸ் பிடித்து உள்ளே தள்ளுவதை இங்கே எவன் தடுத்தான்?? ... ..விடியலுக்கு நாய்க்கடி வாஸின்மருந்து கம்பெனி காரனிடமிருந்து கமிஷன் ....நாய்கள் கருத்தடை , தெரு நாய்கள் மையம் என்று அதிலும் விடியல் கொள்ளை... நாய்கள் பெருக கமிஷன்தான் காரணம் ...


Svs Yaadum oore
செப் 15, 2025 21:48

இந்த நாய்க்கடி வாஸின் விற்பனை மட்டும் வருஷம் 3000 கோடிகள் ....அதில் மருந்து கம்பெனி காரனிடமிருந்து கமிஷன் .....அதற்கும் மேல் நாய்கள் கருத்தடை , தெரு நாய்கள் மையம் அதில் கொள்ளையடிக்கும் தனியார் நிறுவனங்கள் லஞ்ச ஊழல் என்று பல நூறு கோடிகள் பணம் கொள்ளை ....இந்த லஞ்ச ஊழல் கொள்ளை உள்ளவரை இந்த நாய்க்கடி இறப்பு இங்கு தீர வழி இல்லை .....நீயா நானா என்று செட் அப் நாடகம் நடத்தி தெரு நாய்களுக்கு நாய் வளர்ப்போர் காரணம் என்று மடை மாற்றி விடியல் கொள்ளை ....நாய் பிடிப்பதை எவனாவது தடுத்தால் விடியல் போலீஸ் பிடித்து உள்ளே தள்ளுவதை இங்கே எவன் தடுத்தான்?? ...


KRISHNAN R
செப் 15, 2025 20:56

அப்படியா சிவாஜி செய்துட்டாரா என்று ஒரு சினிமா வசனம் உண்டு..... அது போல,,,, அது போல..... என்ன நடந்தாலும்..... தெரு விலங்கு கள்..... வக்காலத்து... இருந்து வரும்


எவர்கிங்
செப் 15, 2025 20:55

நீதிபதி கருத்து என்ன?


Sun
செப் 15, 2025 20:16

ஒரு காலத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது. போதிய நிதி வசதி அப்போது இல்லா விட்டாலும் கூட உள்ளாட்சி அமைப்புகளும் கட்டுப்படுத்தி கொண்டுதான் இருந்தன. தற்போது தெரு நாய்களும், ராபிஸ் பாதிப்பும் அதிகமாக காரணம் தெருநாய் ஆர்வலர்களும், நீதி மன்றங்களின் குழப்பங்களும்தான் காரணம்.


Tamilan
செப் 15, 2025 20:15

கடியால், சட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் 100 கோடி பேர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை