ஆட்டோவில் சென்றபோது 2.2 பவுன் சங்கிலி மாயம்
சேலம்: தஞ்சாவூர் மாவட்டம், செங்கியம்பட்டியை சேர்ந்தவர் ஜெயகணேஷ், 49. கடந்த, 4ல் தஞ்சையில் இருந்து, சேலம், புது பஸ் ஸ்டாண்ட் வந்தார். அங்குள்ள தனியார் நகை கடை முன்பிருந்து, ஒரு ஆட்டோ பின்புறம் லக்கேஜை வைத்து விட்டு, அதில் ஏறி அய்யந்திருமாளிகையில் உள்ள உறவினர் வீட்டுக்கு புறப்பட்டார். அய்யந்திருமாளிகை சென்று இறங்கி, லக்கேஜை எடுக்க முயன்றபோது திறந்திருந்தது. சந்தேகம் அடைந்து சோதனை செய்தபோது, ஒரு பையில் இருந்த, 2.2 பவுன் நகையை காணவில்லை. நேற்று முன்தினம் அவர் புகார்படி, பள்ளப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.