உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும்

2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்படும்

சென்னை; 'தமிழகத்தில், 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடந்த நிகழ்வில், 1,231 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு, அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் இருந்து தேர்வு செய்யப்பட்டோருக்கு, பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார். பின், செவிலியர் களுடன் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் உடனிருந்தார். இதைத்தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'வெளிப்படையான முறையில் 1,231 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மீதமுள்ள, 2,417 காலிப்பணிடங்கள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ