உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காட்டு யானைகளை தடுக்க 25 கி.மீ., துார மின் வேலி

காட்டு யானைகளை தடுக்க 25 கி.மீ., துார மின் வேலி

சென்னை:''கிருஷ்ணகிரி மாவட்டத்தில், யானைகள் மனிதர்களை தாக்குவதை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது,'' என, வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.சட்டசபையில், கேள்வி நேரம் முடிந்ததும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், யானைகள் தாக்கி பலர் இறந்தது தொடர்பான, கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது, அ.தி.மு.க.,- கே.பி.முனுசாமி, பா.ம.க., - ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் - ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - சின்னதுரை, தி.மு.க., - பிரகாஷ் ஆகியோர் பேசினர்.அதற்கு வனத் துறை அமைச்சர் மதிவேந்தன் அளித்த பதில்:முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், நிவாரணத் தொகை, 4 லட்சம் ரூபாயில் இருந்து, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இப்பகுதியில், யானை தாக்கி 10 பேர் இறக்க நேரிடுகிறது. இதை தடுக்க அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உயிர் சேதம் மட்டுமின்றி, பயிர் சேதம், வீடு சேதம், கால்நடை சேதம் ஏற்படுகிறது. அவற்றுக்கும் இழப்பீடு வழங்கப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்ட பகுதியில் சுற்றி திரியும், இரண்டு யானைகளை பிடிக்க, 30 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. யானைக்கு மயக்க ஊசி போட, மூவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம், 100 கி.மீ., துாரம் கொண்டது. இங்கு யானை மோதல் அதிகமாக நடக்கிறது. இப்பகுதியில், 40 கி.மீ.,க்கு பல்வேறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே, 25 கி.மீ., துாரத்துக்கு சூரிய மின் வேலி அமைக்கப்பட உள்ளது. யானை புகா அகழி, 300 கி.மீ., துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ