உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஐ.பி.எஸ்., அந்தஸ்து!

தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஐ.பி.எஸ்., அந்தஸ்து!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு ஐ.பி.எஸ்., அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.காவல் துறைக்கு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக, குரூப் -1 தேர்வு நடத்தி, டி.எஸ்.பி.,க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். டி.எஸ்.பி.க்களாக பணியில் சேருபவர்களுக்கு பதவி, மூப்பு அடிப்படையில் எஸ்.பி.க்களாக பணியாற்றும் போது அவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளில் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்படும். யு.பி.எஸ்.சி. மூலம் தேர்வாகி ஐ.பி.எஸ். அதிகாரிகளாக நியமிக்கப்படுகிறவர்களைப் போல, ஒவ்வொரு ஆண்டும் தமிழக அதிகாரிகளுக்கும் ஐ.பி.எஸ். அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய ஐ.பி.எஸ்., அந்தஸ்து தமிழக போலீஸ் அதிகாரிகள் 25 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், 'மணி, செல்வக்குமார், டாக்டர் சுதாகர், எஸ்.ஆர்.செந்தில்குமார், முத்தரசி, பெரோஸ்கான் அப்துல்லா, சக்திவேல், நாகஜோதி, ராஜராஜன், விமலா, சுரேஷ்குமார், பாஸ்கரன், சண்முக பிரியா, ஜெயக்குமார், மயில்வாகனன், ஜெயலட்சுமி, சுந்தர வடிவேல், உமையாள், எஸ்.சரவணன், டி.செந்தில்குமார், மகேந்திரன், சுப்புலட்சுமி, ராஜன், செல்வராஜ், ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், 'மாநிலக் காவல்துறையில் சிறப்பாகப் பணிபுரிந்தமைக்கான அங்கீகாரமாக இந்தியக் காவல் பணி (I.P.S.) அதிகாரிகளாக உயர்வு பெற்றுள்ள 25 பேருக்கும் எனது பாராட்டுகள்! தங்கள் பணி சிறக்கட்டும்!' என குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

M Ramachandran
ஜன 22, 2025 17:09

இவர்களெல்லாம் உண்மையான விசுவாசிகள் போலும்.


கோமாளி
ஜன 22, 2025 14:58

அண்ணே... கழக ஐ.பி.ஸ் 25 பேர் பார்சல்.


Ramesh Sargam
ஜன 22, 2025 12:26

தங்கள் பணி சிறக்கட்டும் அது என்ன பணி? ஆட்சியில் உள்ளவர்களுக்கு அடிமையாக இருப்பதா?


Subedar Major Shenpahamurthi
ஜன 22, 2025 11:47

Excellent


அப்பாவி
ஜன 22, 2025 10:39

தீயா வேலை செய்யணும் குமாரு...


S.V.Srinivasan
ஜன 22, 2025 10:29

இருக்கிற போலீஸ்காரங்களுக்கெல்லாம் பதவி உயர்வு கொடுத்துட்டா களத்துல இறங்கி யாரு வேலை செய்வாய்ங்க.


Kasimani Baskaran
ஜன 22, 2025 09:49

ஸ்டாலின் ஸ்டாலினுக்கு ஐபிஎஸ் பதவி வழங்கினார்... நேர்மையாக வேலை செய்தால் அதிகபட்சமாக காவலர் பயிற்சிப்பள்ளிக்கு அனுப்பி விடுவார்கள். சொன்னதை கேட்டால் அதிக தொல்லை கிடையாது - ஆனால் பிற்காலத்தில் விசாரணை என்று வரவாய்ப்பு இருக்கிறது.


Palanisamy T
ஜன 22, 2025 09:47

அவர்களின் பணி சிறக்கட்டுமென்று வாழ்த்துகிண்றீர்கள். நல்ல ஆலோசனை. ஆனால் காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று அண்ணாமலை அவர்கள் சொல்லுகின்றார். இந்த நிலையில் இவர்கள் தங்களின் பணியை எப்படி சிறப்புற செய்யமுடியும்


சுந்தரம் விஸ்வநாதன்
ஜன 22, 2025 09:30

இந்த 25 பேருல திருநெல்வேலி கள்ளக்குறிச்சியில் சிறப்பாகப் பணி புரிந்தவர்கள் எத்தனை பேர்?


SABARIRAJAN GANESAN
ஜன 22, 2025 09:13

திராவிடியா மாடல் ஐ.பி.எஸ் ?????


புதிய வீடியோ