உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாலியல் புகாரில் சிக்கிய 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்

பாலியல் புகாரில் சிக்கிய 25 ஆசிரியர்கள் டிஸ்மிஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகம் முழுதும் பாலியல் புகாரில் சிக்கிய 25 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.தமிழகத்தில் தினசரி பாலியல் வழக்குகள் பதிவான வண்ணம் உள்ளன. அதில், பள்ளிகளில் படிக்கும் மாணவிகளை ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய நிகழ்வும் அடக்கம். இப்புகார்களில் பல ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.இதனையடுத்து, பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதுடன், பணி நீக்கம் செய்யப்படுவர். சான்றிதழ்கள் ரத்து செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.இந்நிலையில், பாலியல் புகார்களில் சிக்கிய 25 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். திண்டுக்கல், திருப்பூர், நீலகிரி, புதுக்கோட்டை, விழுப்புரம், தர்மபுரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் என 7 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர்.3 ஆண்டுகளில் 238 ஆசிரியர்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ளனர். 46 புகார்கள் வந்த நிலையில் குற்றவாளிகள் என நிருபிக்கப்பட்ட 25 பேர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு உள்ளனர். பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் சான்றிதழ்களை ரத்து செய்யும் பணியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Kanns
மார் 12, 2025 09:01

Atleast 50%CASES are FALSE


K.n. Dhasarathan
மார் 11, 2025 21:19

சபாஷ் கடுமையான நடவடிக்கை தான் ஒழுக்கம் தரும், இதை பல நீதி அரசர்களும் மறந்து போயி, கொலை குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் , கடத்தல் செய்பவர்களுக்கும் பெயில் வழங்கி மறுபடி கொலைகள் மற்றும் கடத்தல் குற்றங்களுக்கு தெரியாமல் வழி விடுகிறார்கள். கடுமையான தண்டனை தான் ஒரே வழி .


Padmasridharan
மார் 11, 2025 20:35

காவல் துறையினர் இந்த மாதிரி பிடிபடுவது எப்போது


தமிழ்வேள்
மார் 11, 2025 20:30

சர்ச் களில் கும்பலாக ஒட்டு மொத்த பாவமன்னிப்பு கொடுக்க போவதால் அரசு நடவடிக்கை செல்லாது...


தமிழ்வேள்
மார் 11, 2025 20:25

அல்லேலூயா ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் சர்ச் கும்பல் கோபம் கொண்டு ஓட்டை மாற்றி போடச் சொல்லும்.இந்த கோணத்தில் திமுக கும்பல் ஓசனை செய்யலை போல... அவர்களுக்கு தின்னும் சோற்றைவிட பாலியல் குஷால்கள் மிகவும் முக்கியமானது.


Ramesh Sargam
மார் 11, 2025 20:18

யார் அந்த சார்? பிடிபட்டாரா அந்த சார்?


Jana T
மார் 11, 2025 20:07

டிஸ்மிஸ் செய்யப்பட்டால் ஓய்வூதியம் கிடையாது


m.arunachalam
மார் 11, 2025 19:11

நல்ல துவக்கம் . இதை நிறுத்தாமல் தொடர வேண்டும் . நன்றிகள் .


எவர்கிங்
மார் 11, 2025 19:05

விரைவில் கோர்ட் தடை வாங்கி/அப்பாவுக்கு தூது அனுப்பி மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள்


Keshavan.J
மார் 11, 2025 19:05

இவர்களுக்கு நீதி மன்றம் தண்டனை கொடுத்தார்களா? கொடுத்தார்கள் என்றால் இது சரியான நடவடிக்கை...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை