உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தலைமையாசிரியர் இன்றி 2,500 அரசு பள்ளிகள்!

தலைமையாசிரியர் இன்றி 2,500 அரசு பள்ளிகள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மதுரை: தமிழகத்தில், 2,500 தொடக்க, நடுநிலை பள்ளிகள், தலைமையாசிரியர்கள் இன்றி இரண்டரை ஆண்டுகளாக செயல்படுவதால், கல்விச்சூழல் பாதிக்கும் அபாயம் எழுந்துள்ளது.மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அரசு தொடக்க, நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் நியமனங்களுக்கு, 2010 ஆகஸ்ட், 23ம் தேதி முதல், ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி கட்டாயமாகும். இதை பட்டதாரி ஆசிரியர், தொடக்க, நடுநிலை தலைமையாசிரியர்கள் பதவி உயர்வுக்கும் பின்பற்ற வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனால், 2010க்கு முன் பணியில் சேர்ந்தவர்களும், பதவி உயர்வுக்காக ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக, நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கலாகின. தமிழக அரசும், இவ்வழக்குகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனால், தலைமையாசிரியர் உள்ளிட்ட பதவி உயர்வுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதன் எதிரொலியாக தான், 1,650 தொடக்க மற்றும் 800க்கும் மேற்பட்ட நடுநிலை பள்ளிகள் என, 2,500க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும், 50 சதவீதம் பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்களையும் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் பேரவை மாநில தலைவர் ஆரோக்கியதாஸ் கூறியதாவது:பதவி உயர்வுக்கு டி.இ.டி., எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் என்ற வழக்கில் தமிழக அரசின் நிலைப்பாடு முற்றிலும் முரணாக உள்ளது. இவ்வழக்குகள் தொடர்பாக உத்தரவு ஒன்றில் அலகாபாத் உயர்நீதிமன்றம், 'பதவி உயர்வுக்கு டி.இ.டி., தேவையில்லை' என்று தெளிவுபடுத்தியுள்ளது. தெலுங்கானா உயர்நீதிமன்றமும் அதை உறுதிப்படுத்தியுள்ளது.ஆனால், தமிழக அரசு இது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்து, இடைக்கால உத்தரவு பெற ஆர்வம் காட்டவில்லை. அதேபோல, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறைகளை பின்பற்றுவதிலும், தமிழக அரசு பின்தங்கியுள்ளது. இதனால், பதவி உயர்வு வழங்க முடியாமல் ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகள் தலைமையாசிரியர்கள் இன்றி தத்தளிக்கின்றன. அங்கு கல்விச்சூழல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இனியாவது, தமிழக கல்வித்துறை முனைப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

KR
நவ 05, 2024 21:46

Government schools will be kept in poor condition so that all students will be forced to join private schools run by politicians paying very high fees amounts.


பாலா
நவ 05, 2024 14:05

படிப்பது தமிழர்கள் தானே திராவிடியன்களுக்கு தனியார் பள்ளிகள், சுடாலினுதும் திராவிடிய மாதிரி.


M S RAGHUNATHAN
நவ 05, 2024 10:00

அட போங்க சார். ஆசிரியர்களே இல்லாமல் பள்ளிகள் இருக்கின்றன. துறை அமைச்சருக்கு உதயநிதி ரசிகர் மன்ற வேலைகளை கவனிக்கவே நேரம் போதவில்லை. அத்துடன் நேரு அவர்களுடன் வம்பு செய்ய வேண்டி இருக்கிறது. இதையெல்லாம் எப்படி கவனிப்பார்? யாராவது அமைச்சரிடம் அவர் குழந்தைகள் எங்கு படிக்கிறார்கள், அவரே எங்கு படித்தார் என்று கேட்டால் ஓடி ஒளிந்து கொள்வார் அல்லது துணை முதல்வர் பின் மறைந்து கொள்வார்.


வைகுண்டேஸ்வரன்
நவ 05, 2024 09:39

உறங்கிக் கொண்டிருக்கும் உச்ச நீதிமன்றம் தான் காரணம் என்று செய்தியிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. யார் வழக்கு தொடர்ந்தது என்று செய்தியில் இல்லை. தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்த பிறகும் தீர்ப்பு வரவில்லை. அதனால் தலைமை ஆசிரியர்களை நியமிக்க முடியாத நிலை. எல்லா வழிகளிலும் தமிழ் நாட்டின் கல்வியை முடக்கி விடப் பார்க்கும் வட இந்தியா.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 05, 2024 12:51

உங்களது கண்பார்வை சரியென்றால் செய்தியைச் சரியாகப் படியுங்கள் ... தமிழக அரசு இது தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றத்தில் வலுவான வாதங்களை முன்வைத்து, இடைக்கால உத்தரவு பெற ஆர்வம் காட்டவில்லை. அதேபோல, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் விதிமுறைகளை பின்பற்றுவதிலும், தமிழக அரசு பின்தங்கியுள்ளது.


hari
நவ 05, 2024 15:42

வைகுண்டம் ஒன்லி முரசொலி தான் படிபார் போல.....


N.Purushothaman
நவ 05, 2024 09:30

அத்துறை அமைச்சருக்கு இதை விட முக்கியமான நெறைய திராவிட மாடல் வேலை இருக்கு ...


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 05, 2024 12:53

மக்கள் ஆட்சிக்காக தேர்ந்தெடுத்ததே கொள்ளையடிக்கத்தான், வெட்டிப்பெச்சு பேசி வீண்பொழுது போக்கத்தான் என்று நினைப்பவர்கள் ஆட்சி செய்தால் இப்படித்தான் ஆகும் ......


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை