உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  270 மெகா வாட் சூரிய சக்தி மின்சாரம் வாங்கும் வாரியம்

 270 மெகா வாட் சூரிய சக்தி மின்சாரம் வாங்கும் வாரியம்

சென்னை: தமிழக மின்சார வாரியம், 270 மெகா வாட் சூரிய சக்தி மின்சாரம் வாங்க, முடிவு செய்துள்ளது. தமிழக மின் தேவையை பூர்த்தி செய்ய, மின் வாரியத்தின் சொந்த மின் நிலையங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரம் போதவில்லை. இதனால், மத்திய மின் நிலையங்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து, மின்சாரம் வாங்கப்படுகிறது. அதன்படி, 25 ஆண்டுகளுக்கு, 270 மெகா வாட் சூரிய சக்தி மின்சாரத்தை, மத்திய அரசின், 'சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன்' நிறுவனம் வாயிலாக, கொள்முதல் செய்ய, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கு, மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. தற்போது, ஒரு யூனிட் சூரிய சக்தி மின்சாரம், கொள்முதல் விலை சராசரியாக, 4 ரூபாய் என்றளவில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை