உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யானை பராமரிப்போருக்காக ஆனைமலையில் 2வது கிராமம் திறப்பு

யானை பராமரிப்போருக்காக ஆனைமலையில் 2வது கிராமம் திறப்பு

சென்னை : இந்தியாவின் இரண்டாவது யானை பாகன் கிராமத்தை, ஆனைமலையில் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். l பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்காக 26 வாகனங்கள், பழங்குடியின மக்களின் மருத்துவ பயன்பாட்டிற்காக 25 ஆம்புலன்ஸ், நடமாடும் 20 மருத்துவ வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் கொடியசைத்து இயக்கி வைத்தார் l விருதுநகர், திருவண்ணாமலை, துாத்துக்குடி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள எட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில், 772 புதிய வீடுகளை திறந்து வைத்தார் l கோவை மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில், பாகன்கள் மற்றும் யானை பராமரிப்பாளர்களின் நலனுக்காக கட்டப்பட்ட, பணியாளர் குடியிருப்புகள் கொண்ட இந்தியாவின் இரண்டாவது யானை பாகன் கிராமத்தை திறந்து வைத்தார் l மதுரை உணவு பகுப்பாய்வு கூட வளாகத்தில் புதிய ஆய்வக கட்டடம், சென்னையில் புதிய மருந்து கட்டுப்பாடு நிர்வாக இயக்கக கட்டடம், காஞ்சிபுரத்தில் உதவி மருந்து கட்டுப்பாடு இயக்குநர் அலுவலக கட்டடம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையரகத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களும் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன l மதுரை அரசு சட்டக் கல்லுாரியில் கட்டப்பட்டுள்ள கல்விசார் மற்றும் நிர்வாக தொகுதி கட்டடங்கள், வேலுார் அரசு சட்டக் கல்லுாரி நுாலகக் கட்டடம் ஆகியவற்றையும் முதல்வர் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிகளில், அமைச்சர்கள் வேலு, ராஜ கண்ணப்பன், மதிவேந்தன், தலைமை செயலர் முருகானந்தம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி